Anbil Mahesh Poyyamozhi
Anbil Mahesh Poyyamozhi
May 17, 2025 at 04:14 PM
“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா! “தேசிய கல்விக் கொள்கை-2020 எனும் மதயானை”யை ஆரம்பம் முதலே எதிர்த்து அதன் தீமைகளை உணர்த்தி வரும் திராவிட பாகன் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் நான் எழுதிய நூலை வெளியிட்டார் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். வரவேற்புரையாற்றிய கொள்கைப் பிடிப்புமிக்க இளந்தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களுக்கும், நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய மாண்புமிகு மத்திய பிரதேச மேனாள் முதலமைச்சர்-நாடாளுமன்றக் கல்வி நிலைக்குழுத் தலைவர் @digvijaya_28 அவர்களுக்கும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு.கோபால கவுடா அவர்களுக்கும், #isro இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேனாள் இயக்குநர் #mayilswamyannadurai அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக கலந்துகொண்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும், மாணவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றிகள். அனைவரும் இணைந்து மதயானையை விரட்டுவோம். நமது மொழியை, மாணவர்களை காப்பாற்றுவோம்.
Image from Anbil Mahesh Poyyamozhi: “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” நூல் வெளியீட்டு விழா!   “தேசி...
❤️ 🙏 👍 22

Comments