Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
June 4, 2025 at 06:34 AM
*🛡️12 ஆம் வகுப்பு விடைத்தாள் நகல்கள் இன்று வெளியீடு.* * *பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.* * *மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.* * *தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்து, விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் -அரசு தேர்வுகள் இயக்ககம்.* * *மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.* * *இதனை பூர்த்தி செய்து, நாளை காலை 11 மணிமுதல் வரும் சனிக்கிழமை மாலை 5 மணிவரை, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.* * *தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.* *🇮🇳04-06-25🇮🇳*.
👍 3

Comments