📚Edukinniya🎓
                                
                            
                            
                    
                                
                                
                                June 10, 2025 at 02:32 AM
                               
                            
                        
                            🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝
               -----------------------------------
🔹𝗡𝗼: 53
🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.R.Rizeef Ahmed
🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Puttalam
 #edukinniya  #storycompetition
     ➖➖➖➖➖➖➖
வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில்   வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை  கண்டு
நின்ற  வேளை மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. 
செய்வதாரியாத அவன் ஒரு கனம் சிந்தித்தான். மனதை தைரியப்படுத்திக் கொண்டு அப்பொதியின் அருகே சென்றான்.  அபொதியினை
திறந்து பார்க்க  பூரித்து போனான்  உள்ளே இருந்தது
பல சான்றிதழ்கள். உடனே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. காரணம் அவனின் தொலைந்து போன
பல சான்றிதழ்கள் நினைவுக்கு வருகின்றது.  அச்சான்றிதழ்களை நான் தொலைத்ததால் நான் படும்
துயரங்கள் பல. என யோசிக்க அவன் தான்  இச்சான்றிதழ் உரியவரிடம் போய் சேர வேண்டும் என நினைத்து அப்பைக்குள் ஏதாவது முகவரி காணப்படுகின்றதா என  துலாவினான். அச்சமயம் அதன் அடியில் இருந்த காகிதம் ஒன்றில் முகவரி ஒன்று இருந்ததை காண அவன் முகத்தில் அளவறியாத சந்தோசம். பின் பையை எடுத்துக் கொண்டு வீடு சென்றான். 
வீடு சென்றவுடன் அம்மாவிடம் நடந்ததைக் கூற அம்மாவும் மகனின் உயர் குணத்தை எண்ணி அக மகிழ்வு அடைந்தாள். நீ செய்யும் செயலால்  சான்றிதழுக்கு உரிமையாளரின்  உள்ளமும் ,அவனின் எதிர்காலமும் சிறக்கும் என கருத்து கூறினாள் தாய். தாயின் அவ் உரையோடு கணேஷன் அப்பொதியில் காணப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் எடுத்து அழகான முறையில் பொதி செய்து அவ்வுரிய முகவரிக்கு அனுப்பி வைத்தான். தனது கடமையை சரியாக  செய்து முடித்த சந்தோசம் அவன் முகத்தில் ஊஞ்சலாடியது. சில நாட்களின் பின் அவனுக்கு ஓர் கடிதம் கிடைத்தது. அக்கடிதம் சான்றிதழ் உரிமையாளரிடம் இருந்து வந்ததாகவும். அதில் அவனது செயலை பாராட்டி எழுதியிருந்ததோடு சில பரிசில்களையும் அனுப்பி இருந்தார். அவனும் சந்தோசம்  அடைந்தான்.   
இதன் மூலம் விளங்குவது என்ன தம்பி தங்கைகளே நாம் எப்போதும் உதவி செய்பவர்களாக இருக்க வேண்டும்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        24