
Journalist Aashik Signature
June 4, 2025 at 11:42 AM
💢 `குர்பானியில் நடைபெறும் தவறுகள் - 1` 💢
பொதுமக்களிடத்தில் குர்பானி விஷயத்தில் பல தவறான பழக்கமும் எண்ணங்களும் தவறான நடைமுறைகளும் உள்ளன. அதில் ஒன்று, மக்களில் சிலர் குர்பானி கொடுப்பதை *வாஜிப் (கடமை) என உணர்வதேயில்லை.* இது ஒரு நஃபிலான (உபரியான) அமல், செய்தால் நன்மை, அதனை விரும்பினால் செய்து கொள்ளலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் தான் குர்பானி கொடுக்கிறார்கள்.
“இத்தகைய எண்ணங்களும் பார்வையும் முற்றிலும் தவறானது. நபி (ஸல்) அவர்கள், வசதி இருந்தும் *குர்பானி தராதவர்கள் பற்றி கடுமையாக எச்சரித்துள்ளார்கள்*.”
*مَنْ وجدَ سَعَةً لأنْ يُضَحِّيَ فلمْ يُضَحِّ، فلا يَحْضُرْ مُصَلانا*
*_நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_*
_உங்களில் ஒருவருக்கு குர்பானி செய்யும் வசதி இருந்தும் குர்பானி கொடுக்கவில்லை என்றால், அவன் ஈத் தொழுகை நடக்கும் இடத்திற்கு (ஈத்காவிற்கு) அருகில் கூட வரக்கூடாது."_ (முஸ்னத் அஹ்மத்: 8273)
இந்த ஹதீஸில், வசதி இருந்தும் குர்பானி கொடுக்காதவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் *_குர்பானி தருவது வாஜிப்_* (கட்டாயம்) ஆகும். குர்பானி கொடுப்பது ஸுன்னத் அல்லது முஸ்தஹப் (விரும்பத்தக்க) அமலாக இருப்பின், அதை தவிர்ப்பதற்கு இவ்வாறான எச்சரிக்கைகள் கூறப்பட்டிருக்காது. (ஹிதாயா, கிதாபுல் உழ்ஹிய்யா)
*أقامَ رسولُ اللهِ ﷺ بالمدينةِ عشرَ سنينَ يُضحِّي*
_நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த வந்த பிறகு, அங்கு பத்து ஆண்டுகள் தங்கினார்கள். அந்த காலகட்டத்தில், நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் முறையாக குர்பானி கொடுக்கும் பழக்கத்தை கடைபிடித்தார்கள்._ (திர்மிதி: 1507)
🌳 `குர்பானியில் நடைபெறும் தவறுகள் - 2` 🌳
*இரண்டாவது தவறு:* ஹராமான பணத்தில் குர்பானி பிராணியை வாங்குவது.
மக்களிடத்தில் உள்ள மற்றொரு தவறான பழக்கம் என்னவென்றால், சிலர் ஹராமான (தடுக்கப்பட்ட வழிமுறையில் சம்பாதித்த) பணத்தில் குர்பானி செய்கிறார்கள். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; இப்படிப்பட்ட குர்பானிக்கு எந்த மதிப்பும் இல்லை. மேலும் அல்லாஹ்விடத்தில் இத்தகைய குர்பானி ஏற்றுக் கொள்ளப்படுவதும் இல்லை.
*أَيُّها النّاسُ، إنَّ اللَّهَ طَيِّبٌ لا يَقْبَلُ إلَّا طَيِّبًا*
*நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்:* _நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். அல்லாஹ் தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை._ (முஸ்லிம்: 1015)
🍂 _"*குர்பானி பிராணி* மட்டும் குறையில்லாமல் இருந்தால் போதாது"_
🍂 _"குர்பானி பிராணியை வாங்கும் *காசு பணமும்* குறையில்லாமல் (ஹலாலாக) இருக்க வேண்டும்."_
ஆகையால், நம்மால் முடிந்தவரை ஹலாலான தூய்மையான வழியில் மட்டுமே சம்பாதித்து உணவுண்ண வேண்டும். மேலும் ஹலாலான செல்வத்தில் மட்டுமே குர்பானி பிராணி வாங்க வேண்டும். அது மட்டுமே அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கது.
`குர்பானியில் நடைபெறும் தவறுகள் - 3` 🔥
*மூன்றாவது தவறு:* கூட்டுக் குர்பானியில் *காஃபிர்களை* கூட்டு சேர்த்தல்.
கூட்டுக் குர்பானியில் எல்லா பங்குதாரர்களும் *முஸ்லிம்களாக* இருக்க வேண்டியது கட்டாயம். முஸ்லிமல்லாத ஒரே ஒரு நபர் அந்த கூட்டில் இருந்தால் கூட, மற்ற அனைவருடைய *குர்பானியும் செல்லாது*.
_இங்கே நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது; இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை மறுக்கும்_
➡️ *காதியானிகள்*,
➡️ Submitters எனும் *19 கூட்டத்தினர்*,
➡️ ஷகீல் பின் ஹனீஃப் என்பவனை ஈஸாவாக மஹ்தியாக ஏற்கும் *ஷகீலிகள்*,
➡️ ரியாஸ் கோஹர் என்பவனை இறைவனாக ஏற்கும் *கோஹர் ஷாஹி கூட்டத்தினர்* போன்றவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிய காஃபிர்கள்.
இஸ்லாமிய அடிப்படைகளை விட்டும் வெளியேறிய இந்த காஃபிர்கள், நீங்கள் பங்கு கொண்டிருக்கும் கூட்டு குர்பானியில் கூட்டு சேர்ந்து இருந்தால் மீதமுள்ள ஆறு முஸ்லிம் பங்குதாரர்களின் குர்பானியும் நிச்சயம் கூடாது!
மேலே குறிப்பிடப்பட்ட காஃபிர்கள், தங்களை முஸ்லிம்களாக காட்டிக்கொண்டு, நமது கூட்டுக் குர்பானியில் திருட்டுதனமாக சேர்ந்து நம்முடைய குர்பானி அமலை நாசப்படுத்தும் சூழ்ச்சி செய்கிறார்கள்.
ஆகவே கூட்டுக் குர்பானியில் சேர்பவர்கள், *விலை மிகக் குறைவு, வீட்டிற்கே இறைச்சி வந்து சேர்ந்து விடும்* என்று அசட்டையாக இருந்து விடாமல், நம்மோடு இணையக்கூடிய மற்ற கூட்டாளிகள் யார்? அவர்கள் என்ன நோக்கத்திற்காக குர்பானி தருகிறார்கள்? என்பதையும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல கூட்டு குர்பானி நடத்தக்கூடியவர்கள், *கூட்டு சேர்த்தால் போதும், பணம் சம்பாதித்தால் போதும், இந்த வருடம் நாங்கள் இத்தனை மாடு அறுத்தோம்* என்றில்லாமல் இஸ்லாத்தை விட்டு வெளியேறிய இத்தகைய நபர்கள் நம்மோடு கூட்டு சேர்கிறார்களா? என்பதை கண்ணும் கருத்துமாக கண்காணித்து கூட்டு சேர்க்க வேண்டும்.
`குர்பானியில் நடைபெறும் தவறுகள் - 4` 🌿
*நான்காவது தவறு:* பெயர், புகழுக்காக குர்பானி தருவது.
ஒரு மிகப்பெரிய தவறு என்னவெனில், பெயர் புகழுக்கு ஆசைப்பட்டு குர்பானி தருவது. இத்தகைய எண்ணத்தில் குர்பானி கொடுத்தால் அது குர்பானியின் நன்மையை மட்டுமல்ல, மற்ற அனைத்து நல்லமல்களின் நன்மையும் நாசமாக்கிவிடும்.
*لَنْ يَّنَالَ اللّٰهَ لُحُـوْمُهَا وَلَا دِمَآؤُهَا وَلٰـكِنْ يَّنَالُهُ التَّقْوٰى مِنْكُمْ*
_(குர்பானி செய்யப்பட்ட) அவற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்துவிடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்._ (அல்குர்ஆன் : 22:37)
*قالَ اللَّهُ تَبارَكَ وتَعالى: أنا أغْنى الشُّرَكاءِ عَنِ الشِّرْكِ، مَن عَمِلَ عَمَلًا أشْرَكَ فيه مَعِي غيرِي، تَرَكْتُهُ وشِرْكَهُ*
_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் கூறினான்: நான் இணையாளர்களைவிட்டும் இணை கற்பித்தலைவிட்டும் அறவே தேவையற்றவன். யாரேனும் என்னுடன் பிறரையும் இணையாக்கி (எனக்காகவும் பிறருக்காகவும்) நற்செயல் புரிந்தால், அவனையும் அவனது இணைவைப்பையும் (தனியே) விட்டுவிடுவேன்._ (முஸ்லிம் : 5708)
ஆகவே *“இக்லாஸ்”* எனும் மனத்தூய்மையுடன் குர்பானி செய்வோம், அதற்கான முழு நன்மைகளையும் அல்லாஹ்விடம் பெறுவோம்.
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r
👍
2