The Imperfect Show
The Imperfect Show
June 13, 2025 at 08:09 AM
*'என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை வழங்க மாட்டேன்' - ராமதாஸ்.* தைலாபுரம் தோட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "அண்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என்னுடைய மூச்சு காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு வழங்க மாட்டேன். பா.ம.க கட்சியை தொய்வில்லாமல் நடத்த ஆதரவு பெருகியுள்ளது. குடும்பத்தை சார்ந்தவர்கள் அரசியலுக்கு வர கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன். அதனை காப்பாற்ற முடியவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதால்தான் மதிய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி அன்புமணிக்கு வழங்கப்பட்டது. இரண்டே வருடத்தில் வந்துவிடுவதாக அன்புமணி கூறினார். தினம் தினம் அன்புமணியிடம் பேசி சமாதானம் செய்து அமைச்சர் பதவியில் நீடிக்க வைத்தேன். பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதை அன்புமணியிடம் கூறினால், மகிழ்ச்சியாகவே வைத்திருக்கேன் என்று கூறுவார். மைக்கை தூக்கி அடிக்கிறார். பாட்டிலை எடுத்து தாயை அடிக்கிறார்" என்று தெரிவித்தார்.
😂 👍 😢 ❤️ 🤡 33

Comments