Para
June 13, 2025 at 12:06 AM
நீ வேறு, நான் வேறு அத்தியாயம் 19 - வாசிப்பு அனுபவம் ஜின்னா தனது அந்திமக் காலம் நெருங்கி விட்டது என்று அறிந்தால் அதைப் பாகிஸ்தானின் ஏதோவொரு மூலையில் சென்று கழித்திருக்கலாமே? அவருக்கு பலூசிஸ்தான் மாளிகைதானா கிடைத்தது? ஒருவேளை தான் அங்கேயே இறந்தால் அந்த இடத்தை ஒருபோதும் பாகிஸ்தானில் இருந்து பிரிக்க முடியாது என்று நினைத்தாரோ என்னவோ? அல்லது குணமாகி வந்தபின் செய்யவென்று வேறு திட்டம் ஏதும் அவர் மனதில் இருந்ததோ, நாம் அறியோம். என்றாலும் தமக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, பல தசாப்தங்கள் கடந்து அந்த மாளிகையை எரித்துச் சாம்பலாக்கி பழிதீர்த்துக் கொண்டனர் பலூசிஸ்தான் மக்கள். என்னதான் மீளக் கட்டமைத்தாலும் இழந்தது இழந்தது தானே? பாகிஸ்தான் மக்களை குறை சொல்லிப் பயனில்லை என்று புரிகிறது. காஷ்மீர் பற்றி கொஞ்சமேனும் தங்கள் மக்களுக்கு சொல்ல முடிந்த பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு, பலூசிஸ்தான் பற்றி எதுவும் தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் ஏன் இத்தனை அக்கறை? பலூசிஸ்தானை முகம்மது அலி ஜின்னா பாகிஸ்தானுடன் இணைத்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் இன்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க வேண்டிய அவசியம் இன்றைய அரசாங்கத்திற்கு ஏன்? இதற்கெல்லாம் விடை காண 1940 இல் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதுதான் அடித்தளம். அந்த அடித்தளத்தில் தான் இன்றைய கட்டடம் நின்று கொண்டிருக்கிறது. ஆகவே அது அவசியம். அதற்கு இன்னும் சில மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். மீண்டும் சந்திப்போம் ஆசானே. இப்படிக்கு சிகரம் பாரதி. ___ ஜின்னாவுக்கு இருந்தது காசநோய். அந்த மாளிகை முன்னர் ஒரு சானடோரியமாவும் இருந்திருக்கிறது - பாரா
👍 2

Comments