Lankatamil
Lankatamil
June 12, 2025 at 05:48 AM
தோனிக்கு ஐ.சி.சி. உயர் கெளரவம்! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர அணித்தலைவரும், துடுப்பாட்ட வீரருமான மஹேந்திர சிங் டோனி ஐ.சி.சி. இன் வரலாற்று கதநாயகர்கள் (ICC Hall of Fame) பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை வெற்றியாளர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) Hall of Fame பட்டியலில் 11வது இந்திய வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது, கிரிக்கெட்டில் அவர் செய்த பெரும் சாதனைகள் மற்றும் தலைமையிலான வெற்றிகளை அங்கீகரிக்கும் சிறப்பான கௌரவமாகும். தோனி 2007ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ரோபி ஆகிய அனைத்தையும் வென்ற ஒரே கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சீரான ஆட்டம், சிறந்த தலைமைத் திறமை மற்றும் கலங்காத மனப்பான்மைக்கு இந்த விருது ஒத்த சான்றாக இருக்கிறது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
Image from Lankatamil: தோனிக்கு ஐ.சி.சி. உயர் கெளரவம்!  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட...

Comments