
Lankatamil
96 subscribers
About Lankatamil
LANKA TAMIL MEDIA CORPORATION PRIVATE LIMITED is a dynamic and innovative media company that operates in the ever-evolving landscape of the entertainment and communications industry. With a strong focus on creativity, technology, and audience engagement, we strive to deliver compelling content across various platforms.
Similar Channels
Swipe to see more
Posts

நம்ம முதலாளி..நல்ல முதலாளி சென்னையில் AGILISIUM நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு 25 ஊழியர்களுக்கு HYUNDAI SUV CARS-ஐ பரிசாக அளித்து கௌரவித்துள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் முதலாளி குறிப்பிடும் போது ,இது அவர்களுக்கு பரிசு அல்ல அவர்களின் விடா முயற்சிக்கு கிடைத்த ஒரு வாழ்த்து என்ற கூறியுள்ளார். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


இலங்கையர்களுக்கு தடை ! இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவும் போர் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக (16) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் தெரிவித்தார். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


48 மணி நேர வேலைநிறுத்தம்! எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் தொடர்ந்து 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ரயில் சாரதிகளின் சங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


யாழில் இடம்பெற்ற விபத்து! யாழ்ப்பாணம் - மருதங்கேணியில் (16) பிற்பகல் 01 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிசார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


சந்திரிகாவை அழைக்கும் மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, மீண்டும் பொறுப்பேற்றுக் , சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளதார். இதன் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில், அதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை மீளப்பெறுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று ! பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர்களில் ஒருவரான ஏஞ்சலோ மேத்யூஸ் இனது டெஸ்ட் வாழ்க்கையின் இறுதிப் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது. இவரது பிரியாவிடைக்காக காலி மைதானம் தயாராக உள்ளது. இந்தப் போட்டியை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக காண வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


குறைந்த தங்க விலை! இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 246,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் பவுண் ஒன்று 201,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர் நியமனம் பிரிட்டன் உளவு அமைப்பின் தலைவராக, பெண் ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் எம்.ஐ., - 6 உளவு அமைப்பின் தலைவர் பதவியை, 'சி' என்று குறிப்பிடுவர். இந்தப் பதவியில் உள்ளவர் பெயர் மட்டுமே வெளியுலகுக்கு தெரியும். மற்றபடி, அமைப்பின் மற்ற பதவிகளில் உள்ளவர்கள் பெயர்கள் மிகவும் இரகசியமாக பேணப்படும். தற்போதைய தலைவரான சர் ரிச்சர்ட் மூரே, விரைவில் ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, உளவு அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள பிளேசி மெட்ரவெலி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த உளவு அமைப்பின் 116 ஆண்டு கால வரலாற்றில், பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


63,000 சுற்றுலாப் பயணிகள் வருகை 2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,856 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 93 ஆயிரத்து 659 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/


இருக்கை பட்டி காட்டாயம் ! பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கான கூட்டு வேலைத்திட்டத்தை செயல்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் ஆய்வுப் பயணத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். இம் மாதம் 30 ஆம் திகதி முதல் வாகன செயல்பாட்டில் 85 பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கைகளில் அரச பேருந்து சாரதிகளுக்கு கட்டாய இருக்கைப் பட்டிகள் (சீட் பெல்ட்), பொதுமக்களுக்கான வட்ஸ்அப் முறைப்பாட்டு முறைமை, மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன பயணிகளுக்கு கட்டாய இருக்கைப் பட்டிகள் என்பன உள்ளடங்குகின்றன. பேருந்து சாரதிகளுக்கு ஓய்வூதிய முறைமையை முன்மொழிந்துள்ளோம். அடுத்த ஆண்டு இந்த முறைமையை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
