
Seithikathir - Tamil News
June 12, 2025 at 01:50 PM
*💥 இதயத்தை நொறுக்கிவிட்டது!*
ஆமதாபாத் துயரச் சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது; வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை நொறுக்கிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உதவுவதைக் கண்காணித்து வருகிறேன்: பிரதமர் மோடி
*மனதை நொறுக்கிய பேரழிவு!*
ஆமதாபாத்தில் நடந்த துயரமான விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்; மனதை உடைக்கும் பேரழிவு. பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்; விவரிக்க முடியாத இந்த சோகமான நேரத்தில் அவர்களுடன் தேசம் துணை நிற்கிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு
*உதவி செய்ய தயார் - போயிங்*
விமான விபத்து தொடர்பாக இந்தியாவுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்; அவர்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். பயணிகள், விமான பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்
- போயிங், விமான கட்டுமான நிறுவனம்
*ஒருங்கிணைந்த நடவடிக்கை!*
ஆமதாபாத் விமான விபத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கிறோம். அனைத்து விமான நிறுவனங்கள் மற்றும் அவசர உதவிக்கான முகமைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்து வீடியோ: https://www.facebook.com/share/v/16dLxzUPJZ/
- ராம் மோகன் நாயுடு, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😢
❤️
👍
9