
Sri Krishna's Miracle Healing
June 11, 2025 at 02:42 AM
*Time Regression..*
இது ஒரு குறிப்பிட்ட ஒரு அதிர்ச்சியை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் ஸ்தம்பித்து இருப்பதை ஏற்றுக் கொள்ள வைத்து உங்களுடைய அன்றாட வாழ்க்கையை வாழ வைப்பதற்கு இது நிச்சயம் பயன்படும்.
உங்களால் மறக்க முடியாத விஷயங்களை ..
மீள முடியாத நினைவுகளில் இருந்து.. உங்களை மீட்டெடுக்க இது நிச்சயம் உதவும்.
அடுத்து நீங்கள் எப்படி பயணிப்பது ?? என்பது அனைத்தும் உங்கள் ஆத்மாவிற்கு தெரியும் ..
அதன் மூலம் தெரிந்து கொண்டு நீங்கள் அழகாக உங்கள் தற்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும் இலக்கை நோக்கியும் நீங்கள் சிறப்பாக இயங்குவதற்கு இது உதவும்.
*Age Regression* ..
இது குழந்தை பருவத்தில் நமக்கு ஏற்பட்ட பாதிப்புகள்..
மற்றும் நமக்கே அறியாமலும்..
நமக்கு தெரிந்தும்.. நிறைய தொந்தரவுகளை தற்போது நமக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.. அந்த நினைவுகளிலிருந்து அந்த பாதிப்புகளில் இருந்து.. அந்த அதிர்ச்சிகளில் இருந்து .. வெளியே வர இது நிச்சயம் உதவும் .
நிறைய பேருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் குழந்தை பருவத்தில் நடந்திருக்கலாம்.. அல்லது ஏதோ ஒரு மரணமோ ஒரு விபத்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு அதிர்ச்சியோ எதுவாக ஏற்பட்டு இருந்தாலும் அதிலிருந்து அவர்களை மீட் கொண்டு வெளியே கொண்டு வர முடியும்.
அந்நியன் படத்தில் விக்ரமை குழந்தை பருவத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து அவரை மீட்டு வர முயற்சி எடுப்பார்கள், அதுதான் இது..
இது எதுலயுமே எந்த பின் விளைவுகளும் தொந்தரவுகளும் கிடையாது.
உங்கள் மனதை பக்குவப்படுத்தவும்.. நடந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும்.. இனி நடக்க இருப்பதை சிறப்பாக ஏற்றுக் கொண்டு பயணிப்பதற்கும்..
உங்கள் மனதிற்கான சிறந்த ஞான பக்குவத்தை அளிப்பது தான் இந்த தெரப்பியின் நோக்கம்.
*Womb Regression..*
இது ஒரு கருவறை பயணம் என்று சொல்லலாம்..
எந்த குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைதான்.. அதுக்கப்புறம் தான் அது நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுகிறது.
தாய் தந்தை வளர்ப்பு மட்டும் கிடையாது.. இந்த உலகமும் அவனை மாற்றுகிறது என்றே சொல்லலாம்.
ஒரு குழந்தை..
தான் பார்க்கும் கேட்கும் கவனிக்கும் விஷயங்களில் இருந்து தன்னை அதற்கேற்றவாறு மாற்றிக் கொள்கிறது என்று சொல்லலாம்.
அப்படி எனில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது..
ஒரு குழந்தை உடலளவில் மனதளவிலும் புதிதாக பூத்த மலரைப் போன்று பரிசுத்தமாக
மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கியமானதாக இருக்கிறது..
அதன் பிறகு தான் நோய்கள் என வந்திருக்கலாம்.. இந்த கருவறை பயணத்தின் பொழுது அந்த குழந்தை கருவாவதற்கு முன்பு..
விந்து அணுவாக இருப்பதற்கு முன்பு..
அது ஒரு ஒளியாக இருந்திருக்கும்..
அந்த ஒளியில் எந்த நோயும் கிடையாது..
எந்த குறையும் கிடையாது..
அது இறைவனுடைய ஒளி என்றே சொல்லலாம்..
அந்த ஒளிக்கு கால பயணம் சென்று..
அங்கிருந்து உங்களை மனதளவிலும் உடலிலும் குணப்படுத்தும் விஷயமாக இது செயல்படும்.
இந்த Womb Regression Therapy எடுத்துக் கொள்ளும் பொழுது..
நீங்கள் ஒளியாக இருந்து..
குழந்தையாக மாறி..
இந்த பூமிக்கு வந்த பொழுது ..
எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தீர்களோ..
அந்த ஆரோக்கியத்தை அந்த மன தைரியத்தை மீட்டுக் கொடுக்க முடியும்.
மேலும்.. இது குழந்தை பேறு இல்லாத தம்பதிகளுக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாக இந்த Womb Regression Therapy இருக்கும்.
கணவன் மனைவி இருவருக்கும் இந்த Womb Regression Therapy கொடுக்கும் பொழுது..
அவர்களுடைய கர்ப்பப்பைக்கு.. அவர்களுக்கு வந்து சேர வேண்டிய உயிராற்றல், குழந்தையாக வந்து சேரும்..
நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மேலும் இதன் மூலம் பல நன்மைகள் உண்டு..