கதம்பம்
கதம்பம்
June 13, 2025 at 01:28 AM
*வரலாற்றில் இன்று* *13 ஜூன் 2025-வெள்ளி* *============================* 313 : அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை ரோமப் பேரரசர் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். 1381 : லண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரிக்கப்பட்டது. 1514 : ஆயிரம் டன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க்கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. 1774 : அடிமைகள் இறக்குமதியை ரோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியை தடை செய்த முதல் நாடு இதுவாகும். 1871 : லாப்ரடோரில் சூறாவளித் தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர். 1881 : ஜீனெட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக் கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். 1886 : பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் அழிந்தது. 1917 : முதலாம் உலகப் போர் :- லண்டன் நகர் மீது ஜெர்மனிப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர். 1925 : சார்லஸ் ஜெங்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன் முறையாக வெற்றிகரமாக பரிசோதித்தார். 1931 : இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. 1934 : ஹிட்லரும் முசோலினியும் வெனிஸில் சந்தித்தனர். 1944 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனி வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. 1948 : ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. மலேயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது. 1952 : சோவியத் மிக் -15 ரக போர் விமானம் ஸ்வீடனின் டிசி -3 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. 1955 : சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. 1971 : வியட்நாம் போர் :- நியூயார்க் டைம்ஸ் பென்டகன் ஆவணங்களை வெளியிட தொடங்கியது. 1981 : லண்டனில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் ராணியை நோக்கி வெற்று துப்பாக்கி குண்டுகளை சுட்டுத் தீர்த்தான். 1982 : சவுதி அரேபியாவின் மன்னராக பஹத் முடிசூடினார். 2000 : தென்கொரியாவின் அதிபர் கிம் டே - ஜங், வடகொரியத் அதிபரை வட கொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும். 2002 : ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. 2010 : 25143 இடோகாவா என்ற சிறுகோளிலிருந்து மண் மாதிரிகளுடன் ஹயாபூசா என்ற ஜப்பானின் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. 2012 : ஈராக்கின் பல இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

Comments