
கதம்பம்
June 13, 2025 at 01:50 AM
*தினம் ஒரு தகவல்*
🪭🪭🪭🪭🪭🪭🪭
பல்வேறு வகை *வாழைப்பழங்களும்* அதன் பலன்களும்
*ரஸ்தாளி*
பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
உடல் சோர்வு நீங்கும். தினமும் இரவு 1 ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.
அத்தோடு மன அழுத்தமும் குறையும். உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
*கற்பூரவள்ளி* :
நரம்புகளுக்கு வலுவினைத் தரும். இந்த வாழைப்பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளது. இது வேறு எந்தப்பழத்திலும் காணப்படுவதில்லை.
இது உடலுக்கு தேவையான ஜீரன சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் சூட்டைத் தணிக்க வல்லது. உடலுக்கு உடனடி எனர்ஜி டானிக்காக விளங்குகிறது. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
*பூவன் பழம்:*
மூல நோய்களுக்கு உகந்தது. ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. பித்தம் உள்ளவர்கள் உட்கொள்வதும் நல்லது.
*பச்சைப்பழம்* :
இதில் நார்ச்சத்து, வைட்டமின், மினரல் போன்றவை உள்ளது. பொதுவாக, எல்லோரும் பச்சைப்பழத்தை உண்ணலாம்.
பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது. இதயத்துக்கு வலு கூட்டுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது. உடல் குளி்ர்ச்சியை உண்டாக்கும்,
பித்த நோய் குணமாகும்.
*நேந்திர பழம்:*
அதிகமான பொட்டாசியம் இந்த பழத்தில் இருப்பதால் இந்த பழம் தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கும். மலச்சிக்கலை கட்டுப்படுத்தி செரிமானத்தை அதிகரிக்கும். நல்ல
தூக்கத்தை கொடுக்கும் Prebiotics நிறைய உள்ளது.
மொந்தன் பழம்:
இது மூலம் மற்றும் அனீமியாவுக்கு நல்லது. குடல் புண்களைக் கட்டுப்படுத்தும். மாதவிடாய்க்கு நல்லது. அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம்.
இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது தசைக்கு நல்லது, மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
*பேயன் பழம்:*
புகைப்பிடிப்பதை நிறுத்த உதவியாக இருக்கிறது. இதில் உள்ள Tryptophan என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கி புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.
*மட்டி பழம்:*
இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச்சத்து இருக்கிறது. சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும். இரைப்பை மற்றும் குடல் கோளாறு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட அல்சர் பிரச்னைஉள்ளவர்கள் இந்த மட்டி வாழைப்பழத்தினை தொடர்ந்து சாப்பிடலாம்.
🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌
~ *நம்ம கதம்பம் சேனல்*
👍
6