
கதம்பம்
June 14, 2025 at 12:46 AM
*வரலாற்றில் இன்று*
*14 ஜூன் 2025-சனி*
=======================
1158 : பவேரியாவின் மியூனிக் நகரம் அமைக்கப்பட்டது.
1216 : பிரான்ஸின் இளவரசர் லூயி இங்கிலாந்தின் வின்செஸ்டர் நகரைக் கைப்பற்றினார்.
1618 : டச்சின் முதலாவது செய்திப் பத்திரிக்கை ஆம்ஸ்டர்டாமில் வெளியிடப்பட்டது.
1645 : இங்கிலாந்து உள்நாட்டுப் போர் :- நேஸ்பி போரில் 12,000 அரசுப் படைகள் நாடாளுமன்றப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
1667 : இரண்டாவது ஆங்கிலேய டச்சுப் போர் :- டச்சுக் கடற்படையின் மெட்வே முற்றுகை முடிவுக்கு வந்தது.
ஐந்து நாட்கள் நடந்த இப்போரில் அரச கடற்படை பெரும் தோல்வியை கண்டது.
1775 : அமெரிக்கப் புரட்சிப் போர் :- அமெரிக்க விடுதலைப் படை அமைக்கப்பட்டது.
1822 : சார்லஸ் பாபேஜ் வித்தியாசப் பொறி ஒன்றுக்கான திட்டத்தை அரச வானியல் கழகத்தில் சமர்ப்பித்தார்.
1846 : கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்ஸிகோ மீது போரை அறிவித்து கலிபோர்னியா குடியரசை அறிவித்தனர்.
1872 : கனடாவில் தொழிற்சங்கங்கள் சட்டபூர்வமாக்கப்பட்டன.
1900 : ஹவாய் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1907 : நார்வே, பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது.
1926 : பிரேஸில் உலக நாடுகள் அமைப்பிலிருந்து விலகியது.
1931 : பிரான்ஸில் சென் பிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் வரை உயிரிழந்தனர்.
1940 : இரண்டாம் உலகப் போர் :- பாரிஸை ஜெர்மனிக் கைப்பற்றியது.
728 போலந்து போர்க்கைதிகள் நாஜிக்களின் ஆஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக் கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
1941 : அனைத்து ஜெர்மனி, இத்தாலி, சொத்துக்களையும் அமெரிக்கா முடக்கியது.
1944 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியினால் கைப்பற்றப்பட்ட கன் நகரை கைப்பற்றும் முயற்சியில் பல முறை தோல்வி அடைந்ததால் பிரிட்டன் ராணுவம், பெர்ச் நடவடிக்கையை கைவிட்டது.
1946 : மலாயாவில் இருந்து இரண்டாவது தொகுதி தமிழர் இலங்கை வந்து சேர்ந்தனர்.
1949 : இரண்டாம் ஆல்பர்ட் என்ற செம்முகக் குரங்கு ஒன்று வி -2 ராக்கெட்டில் 134 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று விண்வெளிக்குச் சென்ற முதலாவது குரங்கு என்ற பெயரை பெற்றது.
இது விண்வெளியிலேயே உயிரிழந்தது.
1962 : ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம் பாரிஸில் அமைக்கப்பட்டது.
1967 : மரைனர் -5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
சீனா தனது முதலாவது ஹைட்ரஜன் குண்டை சோதித்தது.
1982 : போக்லாந்து போர் :- போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த அர்ஜென்டினாப் படைகள் பிரிட்டன் படைகளிடம் சரணடைந்தன.
1985 : TWA 847 விமானம் கிரீஸில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
1999 : தென் ஆப்ரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி
பதவி ஏற்றார்.
2003 : விடுதலைப்புலிகளின் சரக்கு கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2007 : காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக
ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.
2014 : உக்ரைனின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.
2017 : லண்டனில் வடக்கு கென்சிங்டன் பகுதியில் உயரமான அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தனர்.
74 பேர் காயமடைந்தனர்.
🙏
1