DMK IT Wing
June 16, 2025 at 02:01 PM
*flop ஆன முருகன் மாநாடும், பாஜகவை விரட்டி அடிக்கும் முக்குலோத்தோரும் - காரணம் என்ன?*
தென் மாவட்டங்களில் அதிமுக வின் வாக்கு வங்கி கணிசமாக சரிந்து விட்டது, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்ற முக்குலோத்தோர் சமூகப் பிரதிநிதிகளை எடப்பாடி நீக்கியதன் மூலம் தென் மாவட்டங்களில் அதிமுக வின் செல்வாக்கு முற்றிலும் குறைந்துவிட்டது.
2024 பார்லிமெண்ட் தேர்தல் முடிவுகளில் மதுரை, தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய தொகுதிகளி மூன்றாம் இடத்தைப் பிடித்தது அதிமுக, நாகர் கோவிலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
அதிமுகவின் வாக்குகள் பெரும்பாலனவை திமுகவுற்கே வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
இப்படி தென் மாவட்டங்களில் இறங்கு முகத்தில் இருக்கும் அதிமுகவின் மிச்சசொச்ச வாக்குகளையும் தனக்கானதாக மாற்றுவதற்காக தீவிரமாக வேலை செய்து வருகிறது பாஜக.
அதற்காகத்தான் மதுரையை செலக்ட் செய்து முருகன் மாநாடும், அமித்ஷா வருகையும் திட்டமிட்டார்களாம்.
ஆனால் முருகன் மாநாட்டிற்கு மக்களிடம் எந்த செல்வாக்கும் எழவில்லையாம், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பாஜகவின் இந்த முருகன் மாநாட்டு நாடகத்தை கிண்டலடித்து வருகிறார்களாம்.
தென் மாவட்ட மக்களின் ஆதரவில்லாததால் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஆட்களை தயார் செய்து வருகிறதாம் பாஜக.
முருகன் மாநாட்டைப் போலவே முக்குலத்தோர் சமூகப் பிரிவினரை தன் வசப்படுத்தலாம் என பாஜக போட்டத்திட்டமும் படுதோல்வி அடைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முக்குலத்தோரை கவருவதற்காக முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரையில் உச்சரித்து புகழ்ந்தார் அமித்ஷா, நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக நியமித்தன் மூலமும் பாஜகவுக்கு ஆதரவு பெருகும் என நினைத்தார்கள்.
ஆனால் ஒடிசாவில் முக்குலோத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியனை திருடர் போல பாஜக பிரச்சாரம் செய்தது முக்குலோத்தோர் சமூகப் பிரதிநிதிகளை கொதிப்படைய செய்துள்ளதாம்.
நம்ம சமூகத்தை சேர்ந்தவரை இவ்வளவு கேவலமா பேசினவர்களுக்கு ஆதரவா பேசிட்டு வர்றீங்க என போகும் இடமெல்லாம் டோஷ் விழுகிறதாம்.
எந்தப் பக்கம் போனாலும் அடிமேல் அடியா விழுதே என நொந்துப் போய் உட்காந்திருக்கிறார்கள் காரியக்கர்த்தாக்கள்.
👍
😂
❤️
🙏
❤
🎉
👌
🔥
😁
😮
141