DMK IT Wing
158.7K subscribers
Verified ChannelAbout DMK IT Wing
Official #dmkitwing. follow 👇 Insta: instagram.com/dmkitwing Youtube: youtube.com/@dmkitwing
Similar Channels
Swipe to see more
Posts
*திருப்பரங்குன்றம் முருகனின் திறந்த கடிதம்!* அன்பார்ந்த பக்தர்களுக்கு, வேல் வலம் வந்து உங்களை பாதுக்காக்கும் என் அருள் வாழ்த்துகள்! நான், திருப்பரங்குன்றத்து முருகன், உங்கள் உள்ளத்தில் பக்தியாகவும், அன்பாகவும் வீற்றிருக்கிறேன். ஆனால், இன்று மதுரையில் என் பெயரைப் பயன்படுத்தி சிலர் அரசியல் செய்கின்றனர். பாஜகவினர் என்னை மையப்படுத்தி தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயல்கின்றனர். இது என் பக்தர்களின் தூய உள்ளங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. மதுரையில் திருப்பரங்குன்றத்திலும் பழமுதிர் சோலையிலும் பல்லாயிரமாண்டுகளாக நான் வீற்றிருக்கிறேன், எத்தனையோ தலைமுறைகளாக மக்கள் என்னை உள்ளன்போடு வழிபடுகின்றனர், திருமுருகாற்றுப்படைப் பாடி என்னை சிறப்பித்தார்கள். இன்று ‘இந்து’ என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் யார் என்றே எனக்கு தெரியவில்லை என்னை நாளும் புகழ்ந்து திருப்புகழ்ப் பாடிய அருணகிரிநாதர் கூட இப்படி வார்தைகளை பயன்படுத்தில்லை, இந்து முன்னணியாம், விஷ்வ ஹிந்து பரிசத்தாம், பாஜகவாம் யார் இவர்கள் பக்தர்களே? இவர்கள் எல்லாம் கலவரக்காரர்கள் என்பதை யாம் அறிவோம்! நீங்களும் உணர வேண்டும், சாதி, மத பேதமின்றி காக்கும் முகம் என்று என் திருப் பெயரைப் புகழ்ந்தவர்கள் தமிழர்கள், என்னை வைத்து மதச் சண்டைத் திட்டமா? நீங்கள் ஆதரிக்கலாமா? என் திருநாமத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது, பக்தியின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகும். *முருகன் மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அரசியல் கூட்டங்களில் உண்மையான பக்தர்கள் பங்கேற்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்.* என் திருக்கோயில் உங்கள் உள்ளத்தில் உள்ளது. தூய பக்தியுடன் என்னை வணங்குங்கள். அரசியல் ஆசைகளுக்கு உங்கள் அன்பையும், பக்தியையும் பலியாக்க வேண்டாம். *எனது வேல் உங்களை எப்போதும் காக்கும்!* *வேலுண்டு வினையில்லை!* அன்புடன், *உங்கள் திருப்பரங்குன்றத்து முருகன்!*
திருச்சி சிவா அவர்கள் கழக மாணவரணியின் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஆற்றியுள்ள உணர்ச்சிமிகு எழுச்சியுரை, களம் நோக்கி பாயும். ஏவுகணைகளாக மாணவப் பட்டாளத்தை ஆயத்தமாக்கியுள்ளது. #DMK4TN

மக்களின் குறைகளை தீர்ப்பதில் தனி கவனம் செலுத்த தமிழ்நாடு முழுவதும் "உங்களுடன் ஸ்டாலின்" ஜூலை 15ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை முகாம்கள் நடத்தப்படும் என்று திராவிட நாயகர் அறிவித்துள்ளார். #DMK4TN
அடிமைகளின் கதறலைக் கண்டு நமது ஆஸ்தான கார்ட்டூனிஸ்டிடம் 'அதுக்கு கார்ட்டூன் போடுவியா, இதுக்கு கார்ட்டூன் போடுவியா?' எனக் கேட்கிறார்கள் எதுக்காச்சும் ஒண்ணு போட்டு குடுங்க என்று கேட்டோம்!! 👀 அவரோ 'இந்த அடிமைகளுக்கெல்லாம் புதுசாலாம் கார்ட்டூன் போட முடியாது வேணும்னா போட்ட பழைய கார்ட்டூன்ஸ் இருக்கு கொண்டு போங்க'ன்னு சொல்லிட்டார் 😶😶 நம்மளவிட கோவக்காரரா இருப்பாரு போல 😁 எனவே இந்த கார்ட்டூன்களை நாங்கள் உங்களிடம் சேர்க்கிறோம்! நீங்கள் மக்களிடம் சேர்த்துவிடுங்கள் 🤣 #ADMKFails https://x.com/DMKITwing/status/1935339785134219364
கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுக்கும் ஒன்றிய பாஜக அரசின் மொழிவெறி - இனவெறி நடவடிக்கை பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்கவில்லை. அதிமுகவை பாஜகவிடம் அடகுவைத்த திரு.பழனிசாமி எப்படி வாய் திறப்பார்? #DMK4TN

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக தலைவர் கலைஞர் அவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை கட்டமைத்தார். தற்போது கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேல் மெட்ரோ இரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காலத்திற்கேற்ப கட்டமைப்புகளை நவீனப்படுத்துவதே திராவிட மாடல்! #DMK4TN

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான். அதிலும் M.S.M.E-க்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அதனால்தான், நாட்டிலேயே முதன்முதலாக 2008ஆம் ஆண்டிலேயே M.S.M.E-க்கு என்று தனிப்பட்ட கொள்கையை வெளியிட்டோம். வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மைக்கு அடுத்த இடத்தில் M.S.M.E க்கள்தான் இருக்கிறது! #DMK4TN
*காலை வணக்கம்* 🙏 🌄 *நாள்: 19-06-2025 📅* கிழமை: வியாழன் ⏱️ *திருக்குறள்: 1012* 💬 அதிகாரம்: நாணுடைமை *ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. @DMKITWing

மருத்துவ கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழும் தமிழ்நாடு! #DMK4TN