
Erode Kathir
May 30, 2025 at 08:54 AM
வெடுக்கென நகரும்
ரயிலின் சன்னல் விளிம்பில்
உயிரற்ற தட்டானொன்று
ஒட்டியிருக்கின்றது
மினுமினு றெக்கையும்
கண்ணாடி வாலும்
காற்றைக் கிழித்தேகும்
ரயிலின் தடதடப்பில்
நடுங்குகின்றன
வால் பிடித்து
றெக்கைகள் படபடக்க
காற்றில் விடுகிறேன்
தட்டானைப்
பறக்க விடுதல் தவிர்த்து
வேறெப்படி அஞ்சலி செலுத்த!
~ ஈரோடு கதிர்
❤️
👍
🙏
❤
🩷
🎉
👌
💜
😂
😢
36