
Erode Kathir
1.3K subscribers
About Erode Kathir
வாழ்வின் மீதான தீராத தேடலில் அன்றாடம் கண்டடையும் அனுபவங்களின் மீச்சிறு துளி... 📒
Similar Channels
Swipe to see more
Posts

*தொன்மத்தின் வாசம்* அதிசயமாய் அகப்படுகிறது புழுதிபடிந்த பனையோலை விசிறியொன்று வீசும் விசையினில் திசைமாறி மோதும் காற்றில் என்னை வருடும் இந்த வாசத்தின் பெயர் என்னவாயிருக்கும்? கல்லால் கொட்டி புண்ணுக்கு வைத்த பனைமரத்துச் சாறு; காற்றில் உதிர்ந்து திமிறிக் கிடக்கும் ஓலை; காக்கா முள்ளில் கூட்டல் குறியாய்ச் சிக்கியோடும் காற்றாடி; பதனியும் கள்ளும் போக நொங்காய் விளைந்து கவைக்குச்சி முனையில் ஓடும் வண்டிச் சக்கரம்; முதிர்ந்துதிரும் பழத்தை சுட்டுச் சப்பியபின் அடிநாக்கில் ஆறிக்கிடக்கும் ருசி; பனங்கொட்டையிலிருந்து சீம்பாய் முளைவிட்டு திரண்டு நிற்கும் கிழங்கு; ஒட்டுமொத்தமாய் வீசும் தொன்மத்தின் வாசத்தில் இதுமட்டுமென எதைச் சொல்ல! ~ ஈரோடு கதிர்

சரியில்லாத இடத்தில், நிலையில், உறவுகளில் மற்றும் பொருளாதார சூழலில் இருந்து கொண்டு, ’தனக்கு நிகழும் எல்லாமும் சரியாக மட்டுமே இருக்க வேண்டும்!’ என நினைப்பதில் எந்த நியாயமும் இல்லை. முதலில் சரி செய்ய வேண்டியது, அந்த இடம், நிலை, உறவு மற்றும் பொருளாதார சூழல்தான். சரியில்லாத ஒன்றை, சரி செய்வது எல்லா நேரங்களிலும் அத்தனை எளிதானது அல்ல. அவற்றைச் சரி செய்ய தொடர் உழைப்பு, தெளிவான திட்டமிடல், காத்திருக்கும் மனோபாவம் மற்றும் நிலைத்த பொறுமை தேவை. அவை சரியாகும்பட்சத்தில், நிகழ்கின்றவைகளும் சரியானவைகளாக இருக்கலாம், நிகழ்கின்றவற்றை சமாளிக்கும் வல்லமையும் கிடைத்துவிடும். ~ ஈரோடு கதிர்

அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வதைவிட அன்பாகவே இருந்துவிடுதல் எளிதானதுதான்! ❤ ~ ஈரோடு கதிர்