Erode Kathir
Erode Kathir
June 5, 2025 at 09:21 AM
வானொலி பெட்டி, பழைய பேருந்து, கருப்பு வெள்ளை புகைப்படம், நடைவண்டி, டெண்ட் கொட்டகை என காலவோட்டத்தில் கரைந்து போனவை ஏராளம். அவற்றில் சில பல்வேறு நிலைகள் மாறி இப்போதும் பயன்பாட்டில் இருக்கின்றன. இன்னும் சில பயனற்றதாக மாறி முற்றிலுமாக மறைந்து போயிருக்கின்றன. இப்போது அவைகளை எதன் வடிவிலாவது பார்த்தால், ஏதோவொரு பொக்கிஷத்தை இழந்ததுபோல் பழங்கதைகளைப் பேசுவது அல்லது அசைபோடுவது நிகழ்கின்றது. அதே சமயம், கடந்த காலத்தின் அந்தந்த தருணங்களில் அவைகளையெல்லாம் அகற்றும் வகையில் புதிதாக ஒன்று வந்தபோது, பழையதாகிக் கொண்டிருந்ததை புறங்கையால் ஒதுக்கிவிட்டு புதியதை பெரும் கொண்டாட்டத்தோடு ஏற்றுக்கொண்டதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்!. ~ ஈரோடு கதிர்
👍 ❤️ 👌 💜 😢 26

Comments