தமிழர் மருத்துவம்🍎
தமிழர் மருத்துவம்🍎
June 13, 2025 at 05:40 AM
மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...! வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்... யோகா பயிற்சியின் மூலம் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல் புத்துணர்ச்சியையும் வரவழைத்து கொள்ளலாம். இப்போது மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்க தாளாசனம் செய்யும் முறை பற்றி பற்றி பார்ப்போம்.. மிடுக்கான தோற்றம் தரும் தாளாசனம்.. இவை நின்ற நிலையில் செய்யும் ஆசனம் ஆகும். பிராண சக்தியை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தையும் விருத்தி செய்கிறது. உடல் தசைகளோடு நாலமில்லாச் சுரப்பிகளையும் இயக்குகிறது. பெயர் விளக்கம்: தாள் என்பது பாதம் என்று பொருள்படும். பாதத்தால் இந்த ஆசனம் செய்வதால் தாளாசனம் என்று பெயர். தத்துவம்: தாளை வணங்காத தலை தாமரைத் திருவடி என்றெல்லாம் பாதம் பற்றிப் புராணங்களில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. காலிலிருந்து புறப்படும் 44 நரம்புகள் உடலில் பல்வேறு நாளமில்லாச்சுரப்பிகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. ஆகையால் இந்தக் தாளாசனம் செய்வதால் எல்லா நளமில்லாச் சுரப்பிகளும் மறைமுகமாக இயக்கப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே பாத அழுத்தம் (Accu Pressure) முறை வைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. செய்முறை: முதலில் யோகா செய்வதற்கு விரிப்பு ஒன்றை விரித்து கொள்ள வேண்டும். முதலில் விரிப்பில் நேரா நின்று கொள்ளவும். விரிப்பில் கிழக்கு நோக்கி நின்று பாதங்களை V அமைப்பில் வைத்து இரு குதிக்கால்களும் ஒட்டியவாறு மெதுவாக இயல்பான சுவாசத்தில் மெதுவாகக் குதிகால்களை தூக்கி, அதே நேரத்தில் கைகளையும் தூக்கிக் கால் விரல்களின் அடிச்சதையில் உடலின் எடையைத் தாங்கச் செய்ய வேண்டும். கைகள் இரண்டும் காதோடு ஒட்டியவாறு செங்குத்தாக இருக்க வேண்டும். உள்ளங்கை இரண்டும் உள்நோக்கிப் பார்த்தவாறு செங்குத்தாக நிறுத்தப்பட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்து பழைய நிலைக்கு வரவும். ஆரம்ப காலப் பயிற்சியில் ஈடுபடும்போது 15 விநாடி வீதம் மூன்று முறை செய்யலாம். காலப்போக்கில் ஒரேதடவையில் 45 விநாடிகள் செய்தால் போதுமானது. பழகப் பழக எளிதாகி விடும். மூச்சின் கவனம்: கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு விடும் போது வெளிமூச்சு. உடல் ரீதியான பலன்கள்: நுரையீரல் நெஞ்சுப்பகுதி பலம்பெறும். உடல் முழுவதும் இரத்தஓட்டம் சீரடைந்து நரம்பு மண்டலம் வலிமை பெறும். புத்துணர்ச்சி மிகும். மன வலிமை கூடும். நிமிர்ந்த மிடுக்கான தோற்றம் கிடைக்கும். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை நம் உடலின் தசைகள், நரம்புகள் நன்கு இழுக்கப்பட்டு, சுருக்கப்படுவதால் வலிமை அடைகிறது. இரத்த ஓட்டம் உடல் முழுவதும் பரவி வேகமாக ஓடுகிறது. குணமாகும் நோய்கள்: ஆஸ்துமா, கூன்முதுகு நீங்க... உடலின் எடையைத் தங்கும் பாதம், கணுக்கால், கொண்டைச் சதைகள் போன்ர உடல் பாகங்கள் உறுதி ஆவதால் குதிக்கால் வலி, பாத வலி, வீக்கம், மூட்டுவலி, கால் வலைவு போன்ற பாதிப்புகள்வராது. ‘வெரிக்கோஸ் வெயின்’ நரம்பு முடிச்சிகள் இருந்தாலும் சரியாகிவிடும். யாருக்கு இந்த ஆசனம்: ஆண், பெண் இருபாலரும், குழந்தைகளும் செய்யலாம். ஆன்மீக பலன்கள்: மனஅமைதி பயன்பெறும் உறுப்புகள் : குதிக்கால்கள், கைகள். எச்சரிக்கை: இந்த ஆசனத்தை குதிகால் வலி உள்ளவர்கள் செய்ய கூடாது. யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!! "ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்" https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
Image from தமிழர் மருத்துவம்🍎: மனம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தாளாசனம்...!  வரும் ஜூன் 21...

Comments