தமிழர் மருத்துவம்🍎
                                
                            
                            
                    
                                
                                
                                June 16, 2025 at 04:20 AM
                               
                            
                        
                            https://whatsapp.com/channel/0029VaaROTmI1rciUMtlRb2p
"வயிற்று நோய் நீக்கி வாழ்வளிக்கும் பரிவ்ருத்த திரிகோணாசனம்"
பரிவ்ருத்த திரிகோணாசனம்
மனம்:-
இடுப்புப் பகுதி மற்றும் கைகள்.
மூச்சின் கவனம்:-
குனியும்போது வெளிமூச்சு , ஆசனத்தின்போது இயல்பான மூச்சு, நிமிரும்போது உள்மூச்சு.
உடல் ரீதியான பலன்கள்:-
முதுகுத் தண்டு முழுவதையும் இது நீட்டி அதை ஆரோக்கியமாக வைக்கிறது .
வயிற்றுபுறத்தில் உள்ள பெரும்பான்மையான உள்ளுறுப்புகள் நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப் படுகின்றன.
முதுகுத்தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ் பகுதி ஆகியவற்றின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது.
வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்பட்டு இடுப்பு பகுதியை மெலிதாக்குகிறது.
சிறுநீரகங்கள் உரம் பெறுகின்றன.
உடல் இலேசாக , புத்துணர்வாக, ஓய்வாக உணர்கிறது.
இரத்த ஓட்டம் நன்கு பாய்வது உணரப் படுகிறது.
குணமாகும் நோய்கள்:-
பெரும்பான்மையான வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. இடுப்பு ,மூட்டு தோள்பட்டை, கணுக்கால்கள் ஆகியவற்றின் பிடிப்பு நீங்குகிறது.
உடம்புப் பகுதியில் உள்ள தசைகளின் இறுக்கத்தன்மை நீங்கி தளர்கிறது.
எச்சரிக்கை :-
தீவிரமான இதய நோய் உள்ளவர்கள், இடுப்பு கீழ் வாயுவினால் அவதிப் படுவோர், இதய நோயாளிகள் இதைச் செய்தல் கூடாது.
"சர்வதேச யோக தினம்" (ஜூன்21)
யோகாசனம் பற்றிய தகவலுடன் தொடர்ந்து பயனிப்போம்!!!
"ஆரோக்ய வாழ்வுக்கு யோகம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"