
U7news Tamil
May 27, 2025 at 10:30 AM
*⚪️🔴வாகன சோதனையின் போது நடந்த துயரம்!*
கர்நாடகா: ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியை காவலர்கள் வழிமறித்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அவர்களின் 3 வயது குழந்தை ரிதிக்ஷா, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிர் பிரிந்தது. போலீசாரே விபத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு.
*U7news பார்வை:* வாகனத்தில் செல்லும் போது போலீசார் நிறுத்த சொன்னால் / நிறுத்துவது போன்று தெரிந்தால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தாருங்கள். அதே நேரம், போலீசாரும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளுங்கள். நடுசாலையில் செல்வோரை மறித்து ஓரம்கட்ட சொல்வது, வண்டியை நிறுத்துவதற்குள்ளேயே சாவியை பிடுங்குவது, நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றால் வாகனத்தைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உயிர் விலை மதிப்பில்லாதது.