
U7news Tamil
158 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

*🌦️ நீலகிரியில் கொட்டித் தீர்த்த அதிகனமழை அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவு.* நீலகிரி அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 35 சென்டி மீட்டர் மழை பதிவு. கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 21.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது. சிறுவாணி அணை அடிவாரம் - 12.8 செ.மீ., சின்கோனா - 12.4 செ.மீ., வால்பாறை - 11.4 செ.மீ., மழைப்பதிவு.

⚪️🔴தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட். திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு. திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

*⚪️🔴 கால அவகாசம் நீட்டிப்பு* வருமான வரி தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15ம் தேதிவரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு. வருமான வரி இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிப்பு.

*⚪️🔴வாகன சோதனையின் போது நடந்த துயரம்!* கர்நாடகா: ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியை காவலர்கள் வழிமறித்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அவர்களின் 3 வயது குழந்தை ரிதிக்ஷா, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு! தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிர் பிரிந்தது. போலீசாரே விபத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு. *U7news பார்வை:* வாகனத்தில் செல்லும் போது போலீசார் நிறுத்த சொன்னால் / நிறுத்துவது போன்று தெரிந்தால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தாருங்கள். அதே நேரம், போலீசாரும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளுங்கள். நடுசாலையில் செல்வோரை மறித்து ஓரம்கட்ட சொல்வது, வண்டியை நிறுத்துவதற்குள்ளேயே சாவியை பிடுங்குவது, நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றால் வாகனத்தைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உயிர் விலை மதிப்பில்லாதது.

⚪️🔴 *குரூப்-4 தேர்வு: விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள் * டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் (மே 24) நிறைவு விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 3,935 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு; குரூப்-4 தேர்வுக்கு தகுதியானவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

*💥 HR-கள் பணிநீக்கம்!* IBM நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்! இதில் பெரும்பாலும் HR துறையை சார்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன் 200 HR-களை பணிநீக்கம் செய்துவிட்டு இந்நிறுவனம் Al-ஐ பணிக்கு அமர்த்தியது.

*⚪⚫பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல் நலக்குறைவால் காலமானார்* ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.


⚪️🔴அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க அவகாசம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 30ம் தேதி நீட்டிப்பு. விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் இன்றுடன் முடிந்த நிலையில் மே 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு. அரசு கல்லூரிகளில் இதுவரை 2,25,705 பேர் விண்ணப்பம். 1,82,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.

⚪️🔴11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட். கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட். பத்தனம்திட்டா, எர்ணாகுளம், இடுக்கி, வயநாடு, கோட்டயம், பாலக்காட்டிற்கு இன்று ரெட் அலர்ட். திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை.

*🪙 தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.* வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்: தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும். அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும். தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும். வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி. தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும். அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும். கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும். தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.