N. Chokkan
June 6, 2025 at 08:43 AM
நேற்று மிக நிறைவான ஒரு நாள்.
'பணம் படைக்கும் கலை' நூலின் முன்பதிவுப் பிரதிகளிலும், அதோடு ஆர்டர் செய்யப்பட்ட என்னுடைய மற்ற புத்தகங்களிலும் கையொப்பமிட்டேன். அவை உடனுக்குடன் பொதியாக்கி அனுப்பப்பட்டன. இன்றுமுதல் அவை உங்கள் கைகளுக்குக் கிடைக்கத் தொடங்கும்.
1997லிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய இத்தனைப் புத்தகங்களை ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பார்ப்பது இதுதான் முதன்முறை. அதுவே பெரிய திகைப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.
பின்னர், நான் கையொப்பமிடக் கையொப்பமிடப் புதுப் பெட்டிகள் வந்துகொண்டே இருந்தன, எடுத்து அடுக்கிக்கொண்டே இருந்தார்கள், சுகமான மலைப்புணர்வு. அதைக் கொண்டாடும்வகையில், மாலை பா. ராகவன் ஒரு பிரமாதமான பலாப்பழ குனாஃபா பரிசளித்தார். அதற்குமுன் கண்ணன் ராஜகோபாலன் தம்பதியரைச் சந்தித்ததும், ஶ்ரீகாந்த் மீனாட்சி அவர்களுடன் நிதி மேலாண்மை, பழக்கங்கள், ஒழுக்கங்களைப்பற்றிய நீண்ட உரையாடலும் பரபரப்பான நாளை முழுமையாக்கின.
படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது, எல்லாரும் தொலைக்காட்சி, ஓடிடி, குறுவீடியோக்கள் என்று நகர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு பரவலாகியிருக்கிற இந்நேரத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஒரு புதிய நம்பிக்கையைத் தருகின்றன, இன்னும் ஊக்கத்துடன் செயல்படத் தூண்டுகின்றன. உங்கள் அன்புக்கு நன்றி.
'பணம் படைக்கும் கலை'யைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள். காத்திருப்பேன்.
❤️
👍
🙏
26