N. Chokkan
June 18, 2025 at 05:44 AM
Amazon, Flipkart இரண்டிலும் Pirated books தொல்லை மிகவும் அதிகமாகிவிட்டது. திருட்டு PDF கோப்பை வைத்துக்கொண்டு மிக மட்டமான தரத்தில் புத்தகங்களை "அச்சிட்டு" விற்கிறார்கள். இனி ஆன்லைனில் எந்த ஆங்கிலப் புத்தகமும் வாங்கப்போவதில்லை என்கிற தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்.
இதில் சுவையான வரலாறு என்னவென்றால், மேற்சொன்ன இரு நிறுவனங்களும் முதன்முதலாகப் புத்தக விற்பனையோடுதான் தங்களுடைய இணையத்தளத்தைத் தொடங்கினார்கள், வழக்கமான புத்தக விற்பனையாளர்கள், கடைகளுக்குச் சவால் விட்டு வெற்றிபெற்றார்கள்.
இப்போது, அதே நிறுவனங்கள் நம்மைப் புத்தகக் கடைகளை நோக்கித் தள்ளுகின்றன.
❤️
👍
😢
6