⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 9, 2025 at 04:45 PM
நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து வைகாசி பௌர்ணமி நாளில் இதில் வேண்டுதலை எழுதி வைத்தால் போதும் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறும். https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW அமாவாசை, பௌர்ணமி என்பது பிரபஞ்ச பேராற்றல் மிகுந்த நாட்களாக கருதப்படுகிறது. அதிலும் சிறப்பு மிகுந்த மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது ஜூன் மாதம் பத்தாம் நாள் வருகிறது. அன்றைய நாளில் நாம் எந்த முறையில் நம்முடைய வேண்டுதலை வைத்தோம் என்றால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். **வேண்டுதலை நிறைவேற்றும் வழிபாடு** பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு. அதிலும் வைகாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமிக்கு கூடுதல் சிறப்பு இருக்கிறது என்று கூறலாம். அதே போல் எப்பொழுதும் விசாக நட்சத்திரமும் பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வந்து வைகாசி விசாகம் ஆக தான் நாம் வழிபாடு செய்வோம். ஆனால் இந்த வருடம் விசாக நட்சத்திரம் முடிந்த பிறகு தான் பௌர்ணமி திதி தொடங்குகிறது என்பதால் ஜூன் மாதம் பத்தாம் தேதி பௌர்ணமி என்பது முழுமையாக இருக்கிறது. அந்த நாளில் நாம் எந்த முறையில் நம்முடைய வேண்டுதலை வைக்க பிரபஞ்சம் அந்த வேண்டுதலை நிறைவேற்றும் என்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம். பௌர்ணமி தினத்தன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து வீட்டு பூஜை அறையில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி வெள்ளை நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் அன்று முழுவதும் எரிவதைப்போல பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல் நம்முடைய வீட்டு சமையலறையிலும் நம்முடைய வீட்டின் வடமேற்கு பகுதியிலும் நெய் தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். இந்த இரண்டு தீபங்களும் காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணி வரை முழுமையாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். அடுத்ததாக அன்றைய தினத்தில் நம் அணியக்கூடிய ஆடை என்பது வெண்மை அதிகமாக இருக்கக்கூடிய ஆடையாக இருக்க வேண்டும். ஏனென்றால் அன்றைய தினம் சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சந்திர பகவானுக்குரிய நிறமாக வெள்ளை நிறம் திகழ்கிறது என்பதால் தான் வெள்ளை நிற ஆடையை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. காலையில் இந்த தீபங்களை ஏற்றி வைத்த பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நிறைவேறி விட்டதாக எழுதி முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்துவிட்டு அந்த பிரியாணி இலையை சிவபெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினத்தில் நம்மால் இயலும் பட்சத்தில் வறுமையில் வாடுபவர்களுக்கு தயிர் சாதம் போன்றவற்றை தானமாக தர வேண்டும். இப்படி தருவதன் மூலமும் சந்திர பகவானின் அருளை நம்மால் பெற முடியும். அன்றைய தினம் குலதெய்வ வழிபாட்டை மறவாமல் மேற்கொள்வதன் மூலம் குலதெய்வ அருளையும் பெற முடியும். https://chat.whatsapp.com/ErcMchQrLK6I1jqzJzT7AW பௌர்ணமி தினத்தில் இந்த முறையில் நாம் வழிபாடுகளையும் வழிமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் பிரபஞ்ச பேராற்றலை விரைவில் பெற முடியும். வேண்டுதலையும் நிறைவேற்ற முடியும். சந்திர பகவானின் அருளையும் பெற முடியும் சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156271067?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

Comments