⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 10, 2025 at 01:39 AM
வினைகளை தீர்த்து முருகனருள் பெற பாட வேண்டிய திருப்புகழ்  நாலி ரண்டித ழாலே கோலிய      ஞால முண்டக மேலே தானிள           ஞாயி றென்றுறு கோலா காலனு ...... மதின்மேலே ஞால முண்டபி ராணா தாரனும்      யோக மந்திர மூலா தாரனு           நாடி நின்றப்ர பாவா காரனு ...... நடுவாக மேலி ருந்தகி ரீடா பீடமு      நூல றிந்தம ணீமா மாடமு           மேத கும்ப்ரபை கோடா கோடியு ...... மிடமாக வீசி நின்றுள தூபா தீபவி      சால மண்டப மீதே யேறிய           வீர பண்டித வீரா சாரிய ...... வினைதீராய் ஆல கந்தரி மோடா மோடிகு      மாரி பிங்கலை நானா தேசிய           மோகி மங்கலை லோகா லோகியெ ...... வுயிர்பாலும் ஆன சம்ப்ரமி மாதா மாதவி      ஆதி யம்பிகை ஞாதா வானவ           ராட மன்றினி லாடா நாடிய ...... அபிராமி கால சங்கரி சீலா சீலித்ரி      சூலி மந்த்ரச பாஷா பாஷணி           காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி காம தந்திர லீலா லோகினி      வாம தந்திர நூலாய் வாள்சிவ           காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே. சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇 https://primetrace.com/group/2243661/post/1156296011?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ

Comments