
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 10, 2025 at 06:58 AM
சங்கத்தமிழ் சிவசக்தி குழு
https://kutumb.app/3f179095fd0f?ref=DG4CJ&screen=star_share
பகளாமுகீ தேவி
மத்தியப் பிரதேசத்தில் தந்திர மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன.
பொதுவாகவே மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவியதாக ஒரு கருத்து உண்டு.
அவற்றில் ஒன்றுதான் பகளாமுகி தேவி ஆலயம் ஆகும். அந்த ஆலயம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி நகரில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் உள்ள நல்கேடா என்ற சிற்றூரில் அமைந்து உள்ளது.
தாந்த்ரீக அடிப்படைக் கொண்ட மகாவித்யா எனும் தச வித்தியா சாதனாவில் பத்து தேவிகள் உள்ளனர். அந்த பத்து தேவிகளும் பார்வதி தேவியின் பல்வேறு தாந்த்ரீக பெண் ஸ்வரூபங்களே ஆகும்.
நர்மதாவின் கிளை நதியான லகுந்தார் என்ற நதியின் கரையைத் தொட்டபடி உள்ள இந்த ஆலயமும் சக்தி பீடங்களில் ஒன்றே எனக் கூறுகின்றார்கள்.
உலகிலேயே ஓரிரு பைரவர் ஆலயத்தைத் தவிர அனைத்து தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக சக்திகளைத் தரும் ஆலயங்கள் அனைத்துமே பெண் தெய்வங்களை மூலமாகக் கொண்ட ஆலயமாகவே உள்ளது. அதில் முக்கியமானது பகளாமுகி தேவி ஆலயமும் ஒன்றாகும்.
பகளாமுகி என்றால் கொக்கு முகத்தவள் என்று பொருள்படும்.
இந்த ஆலயத்தின் மிக அருகிலேயே நான்கு பக்கங்களிலும் மயானங்கள் உள்ளன. நான்கு பக்கங்களிலும் மயானங்கள் சூழ்ந்துள்ள சூழ்நிலையில் எந்த ஒரு ஆலயமும் எந்த ஒரு இடத்திலும் அமைந்திருக்கவில்லை.
பகளாமுகி தேவி ஆலயத்தைப் பற்றி சிறு வரலாறு அங்குள்ள ஒரு கல்வெட்டில் இருந்து தெரிய வருகின்றது. மற்றபடி ஆலயம் எப்பொழுது கட்டப்பட்டது என்ற விவரம் இல்லை.
அனைத்து செய்திகளுமே அங்குள்ள பண்டிதர்கள் மற்றும் கிராமத்தினர் தரும் வாய்மொழிச் செய்திகளே.
ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவிக்கு மூன்று கண்கள் உள்ளன. மந்திர தந்திர சக்திகளின் தெய்வமான அவள் மேனி பொன்னிறமானது. அவளுக்கு பிடித்த வண்ணம் மஞ்சள் நிறம்.
இங்குள்ள ஆலயத்தில் உள்ள பகளாமுகி தேவி மூன்று கண்களை மட்டும் அல்ல மூன்று முகங்களையும் கொண்ட பகுளாமுகி தேவியாக காட்சி தருகின்றாள்.
பகளாமுகி தேவியின் சிலை பூமியில் இருந்து தானாக வெளி வந்தது எனவும் கூறப்படுகின்றது.
பகளாமுகி தேவி மூன்று தேவிகள் உள்ளடங்கிய தெய்வம், அதாவது பகளாமுகி தேவி, தேவி மகாலஷ்மி மற்றும் தேவி சாமுண்டா என்றும் அப்படிப்பட்ட தேவியை தன்னுள் இருந்து பார்வதி தேவியே படைத்து அனுப்பி உள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஆனால் வேறு சிலரோ உலகில் சத்யுகத்தில் விளங்கிய தீமைகளை அழிக்க பகளாமுகி தேவிக்கு பரமசிவனின் மூன்று கண்களின் அபார சக்தியை தந்து அனுப்பியதாகவும் அதை வெளிப்படுத்தும் விதமாகவ பகளாமுகி தேவிே மூன்று கண்கள் மற்றும் மூன்று முகங்களைக் கொண்டு அங்கு காட்சி தருகின்றாள் என்றும் பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
பகளாமுகி தேவியின் பிராகாரத்தைச் சுற்றி பதினாறு தூண்கள் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த தூண்கள் அனைத்தும் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கியவை.
அந்த சக்திகள் பகளாமுகி தேவியின் சக்திகள் என்றும் அந்த சக்திகள் தினமும் தொடர்ந்து அந்த தூண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டு அந்த கருவறையை சக்திகள் அடங்கிய அறையாக வைத்துள்ளதாகவும் அந்த சக்திகளையே அங்கு வந்து சாதனாக்களை செய்யும் சாதனாத்விகள் அங்குள்ள பகளாமுகி தேவியின் அருள் கிடைத்ததும் தம்முள் கிரகித்துக் கொள்வதாகவும் நம்பிக்கை உள்ளது.
ஆகவேதான் இங்கு வந்து பகளாமுகி தேவியை வழிபட்டுவிட்டு செல்லும் பக்தர்களின் உடலில் அந்த சக்தி புகுந்து கொண்டு விடுவதினால் அவர்களை எந்த தீய சக்தியாலும் எந்த தீமைகளையும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள்.
ஆனால் தீய எண்ணங்களை மனதில் ஏந்திக் கொண்டு அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக அங்கு வந்து சாதனாக்களை செய்பவர்களுடைய எண்ணம் நிறைவேற பகுளாமுகி தேவி அருள் புரிவது இல்லை. அவர்களுக்கு தந்திர சக்திகள் கிடைப்பது இல்லையாம்.
இங்குள்ள ஆலயத்தில் காணப்படும் பகளாமுகி தேவியின் சிலை 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆராய்சியாளர்களும், வரலாற்று வல்லுனர்களும் கூறினாலும், அது உண்மை அல்ல
மகாபாரத யுத்தம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்பதினால் பாண்டவர்கள் வந்து வழிபட்ட பகளாமுகி தேவி சிலையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.
பகளாமுகி தேவியின் மந்திரத்தை உச்சாடனம் செய்து வந்தால் எதிரிகள் அழிவார்கள். இந்த தேவிக்கு வாக்கு வன்மையை அடக்கும் சக்தி உள்ளது என்பதினால் அலுவக நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் மற்றும் தேர்வுகளில் வெற்றி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு பலவிதமான பிரிவினர் பகளாமுகி தேவி மந்திரத்தை உச்சாடனம் செய்து துதிக்கின்றார்கள்.
மேலும் தனது பக்தர்களிடம் அவர்களது விரோதிகள் கொண்டுள்ள தவறான கருத்துக்கள் அகலவும், பக்தர்களின் ஏமாற்றங்கள் அவர்களை பாதிக்காமல் இருக்கவும் பகளாமுகி தேவி வகை செய்கின்றாள்.
பகளாமுகி காயத்ரி
ஓம் பகளாமுக்யை ச வித்மஹே
சதம்பின்யை ச தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
ஓம் ப்ரஹ்மாஸ்த்ராய வித்மஹே
மஹாஸ்தம்பிணி தீமஹி
தன்னோ பகளா ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
பகளாமுகி ச தீமஹி
தன்னோ அஸ்த்ர: ப்ரசோதயாத்
பகளாமுகி மூல மந்திரம்
ஓம் ஹ்ரீம் பகளாமுகீ சர்வ துஷ்டானாம் வாசம் முகம் ஸ்தம்பய, ஜிஹ்வாம் கீலய கீலய புத்திம் நாசய நாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹ ||
சங்கத்தமிழ் சிவசக்தி குழு 👇
https://primetrace.com/group/2243661/post/1156346377?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
