
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 13, 2025 at 04:21 PM
**நமது சிவசக்தி ஆன்மிக குழுவிலிருந்து**
**நாளை 14-06-2025 அதிசக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் கோவிலில் இந்த விளக்கை மட்டும் ஏற்றி விட்டால், கடன் தொந்தரவிலிருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்கும். அரச வாழ்வை வாழ்வை பெறலாம்.**
நாளைய தினம் சனிக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் அதிசக்தி வாய்ந்த சங்கடகர சதுர்த்தி. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். இந்த விளக்கை மாலை நேரத்தில் ஏற்றுவதை விட, நாளை காலை நேரத்தில் ஏற்றுவது தான் சிறப்பு. ஆகவே இந்த நேரத்தை தவறவிட வேண்டாம். கொஞ்சம் கஷ்டப்பட்டு சனிக்கிழமை வந்திருக்கும் சங்கடஹர சதுர்த்தி அன்று, அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லவும்.
பெரும்பாலான விநாயகர் கோவிலில் அரசமரம் இருக்கும். உங்களுடைய வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலில் அரச மர இலை கிடைத்தால் சிறப்பு. இல்லை என்றால் இரண்டு அரச இலைகளை நீங்களே எடுத்துச் செல்லுங்கள். மரத்திலிருந்து பறித்து எடுத்தாலும் சரி, மரத்திற்கு கீழே உதிர்ந்து கிடக்கும் பச்சை நிற இலைகளை எடுத்துக் கொண்டாலும் சரி. இரண்டு இலைகளை எடுத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, அதற்கு நடுவே சந்தன குங்கும பொட்டு வைத்து, விநாயகர் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்காக ஒரு இடம் இருக்கும்.
அந்த இடத்தில் இந்த இரண்டு அரச இலைகளை வைத்து அதன் மேலே ஒரு அருகம் புள்ளை வைத்து, அதன் மேலே 2 மண் அகல் விளக்கை வைத்து கொஞ்சம் நெய் ஊற்றி, பஞ்ச திரி போட்டு, அந்த நெய்யில் சிறிது பச்சை கற்பூரத்தூள் போட்டு, தீபம் ஏற்றி பிள்ளையாரப்பா இன்றோடு என்னுடைய கடன் சுமை குறைய வேண்டும். வருமானம் பெருக வேண்டும்.
வாங்கிய கடன் பிரச்சனையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றேன். எப்படியாவது இந்த சங்கடத்திலிருந்து என்னை காப்பாற்று என்று மனம் உருகி வேண்டி அந்த விநாயகரை மூன்று முறை சுற்றி வழிபாட்டை நிறைவு செய்து கொண்டால் போதும். உங்களுடைய வாழ்க்கை ஜாம் ஜாம் என்று ஓஹோ என்று மாறிவிடும். கடன் சுமையெல்லாம் படிப்படியாக குறைய துவங்கிவிடும்.
கையோடு மறைக்காமல் ஒரு சிதறு தேங்காயை விநாயகரிடம் உடைத்து விடுங்கள். அந்த சிதறு தேங்காய் உடைக்கும் போது இன்றோடு என்னுடைய கடனும் இதுபோல உடைந்து சிதறி காணாமல் போய்விட்டது என்று, பிரார்த்தனை செய்து கொண்டு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். நிச்சயமாக விநாயகர் உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய நல்ல வழியை காட்டிக் கொடுப்பார்.
https://chat.whatsapp.com/KMDNStn1PenBi7ENYRF7OK
கடன் சுமையிலிருந்து உங்களை விடுபட வைப்பார். அரச இலையில் விளக்கு போட்டால் அரச வாழ்வு கிடைக்கும் என்பதை நீங்களே அனுபவபூர்வமாக உணர்வீர்கள்
நமது சிவசக்தி குழுவில் ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் மட்டும் இக்குழுவில் பதிவிடப்படும் தவறான கருத்துக்கள் யாரும் பதிவிடக்கூடாது 👇
https://primetrace.com/group/2260527/post/1156650215?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ