
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
June 15, 2025 at 04:03 PM
எந்த ஒரு வாழ்வியல் சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் தினசரி மந்திர ஜபம்
தேவையான பொருட்கள்
பச்சைத்துண்டு, மகாலட்சுமி விளக்கு புதியது, பஞ்சுத்திரி, செக்கில் ஆட்டிய இலுப்பை எண்ணெய்
தேவையான தகுதிகள்
18 வயது நிரம்பிய ஆண், பெண் எவரும் ஜபிக்கலாம்.
எந்த ஜாதி, மதம், மொழி, இனமாக இருந்தாலும் ஜபிக்கலாம்.
இந்த மந்திரம் தினமும் ஜபிக்க வேண்டிய நேரம்:
தினமும் காலை 4.30 முதல் 5 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் 9.30 வரையிலான நேரத்தில் ஏதாவது 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்.
இந்த மந்திரத்தை ஜபிக்கும் முறை
புதியதாக வாங்கிய மகாலட்சுமி விளக்கை வடக்கு நோக்கி தீபம் எரியுமாறு வைக்க வேண்டும்.
பச்சைத் துண்டின் மீது அமர்ந்து மகாலட்சுமி விளக்கில் இலுப்பை எண்ணெய் நிரப்பி, பஞ்சுத்திரியில் தீபம் ஏற்ற வேண்டும்.
பிறகு, கிழக்கு நோக்கி பச்சைத் துண்டின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும். அப்படி அமர்ந்திருக்கும் போது, உடலின் எந்தப்பகுதியும் தரையில் படக் கூடாது
அப்படிப்பட்டால், மந்திர ஜபத்துக்கான பலன் நம்மை வந்து சேராமல் பூமிக்குள் போய்விடும்.
ஓம் அகத்தியர் முதலான 18 சித்தர் பெருமக்கள் போற்றி என்று ஒருமுறை ஜபித்து விட்டு,
ஓம் மகா கணபதி நமஹ என்று ஒருமுறை ஜபித்து விட்டு,
ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்து விட்டு,
ஓம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்.
பிறகு, ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும். ஜபிக்கும் போது எண்ணக் கூடாது.
ஒரு அமாவாசையன்று இந்த ஜபத்தை ஆரம்பிக்க வேண்டும்.
அன்று முதல்தினமும் காலையில் 15 நிமிடமும், இரவில் 15 நிமிடமும் ஜபித்து வரவேண்டும்.
இரண்டாவது அமாவாசை வரும் போது,ஜபநேரத்தை 30 நிமிடமாக உயர்த்துங்கள்.
மூன்றாவது அமாவாசை வரும் நாளில் இருந்து, ஜபநேரத்தை 45 நிடமாக அதிகப்படுத்துங்கள்.
நான்காவது அமாவாசையிலிருந்து தினமும் காலையில் 60 நிமிடமும், இரவில் 60 நிமிடமும் ஜபித்து வரவும். ஒரு நாளுக்கு ஒரு வேளைக்கு ஒரு மணி நேரம் வீதம், இரண்டு மணி நேரம் வரை ஓம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்தாலே அவர்களுடைய அனைத்து லட்சியங்களும் படிப்படியாக நிறைவேறும்
முக்கியமான உபதேசம் என்னவெனில்,இந்த ஜபத்தை ரகசியமாக, எவரிடமும் தெரிவிக்காமல் பின்பற்றிவருவது அவசியம்.
இதனால், நீங்கள் சர்வசக்தி வாய்ந்த, அதேசமயம் அடக்கமான மனிதராகவும் இருப்பீர்கள்.
இந்த உலகத்திலேயே நிம்மதியாக இருப்பவர் நீங்கள் மட்டுமே!
இந்த முறைப்படி மூன்று ஆண்டுகள் வரை தினமும் ஒம் வராகி சிவசக்தி ஓம் என்று ஜபித்து வந்தால், இந்த உலகத்திலேயே அனைத்தும் உள்ளவர் நீங்கள் மட்டுமே!
நமது சிவசக்தி குழுவில் ஆன்மீகம் சார்ந்த பதிவுகள் மட்டும் இக்குழுவில் பதிவிடப்படும்
https://primetrace.com/group/2260527/post/1156838772?utm_source=android_post_share_web&referral_code=DG4CJ&utm_screen=post_share&utm_referrer_state=SUPER_ADMIN?ref=DG4CJ
