Makkaludan Naam
Makkaludan Naam
June 18, 2025 at 12:49 PM
*கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் B.Sc.,MLA., அவர்களின் அறிவிப்பு.!* அன்புடையீர்! வணக்கம். *கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் "புரட்சித் தமிழர்" மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைப்படி* தமிழகத்தில் தென்மாவட்ட குறிப்பாக மா விவசாயிகள் திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான *தமிழக அரசே மா விவசாயிகளிடம் கொள்முதல்செய்வதும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவும், மா விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்கவும்* வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மா பயிரிட்டுள்ள விவசாயிகளின் துயரங்களை உடனடியாக தீர்க்காத *விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து* *ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.!* *இடம்: நத்தம் பேருந்து நிலையம் அருகில்* *நாள்: 20.06.2025* *நேரம்: காலை 10.00 மணி அளவில்*

Comments