TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
June 18, 2025 at 06:18 AM
தமிழகத்தில் (Tamilnadu) 4,777 டாஸ்மாக் மதுபான கடைகள் (Tasmac Shops) செயல்பட்டு வருகின்றன. இவை பள்ளி, மருத்துவமனை, கோவில் ஆகியவற்றில் இருந்து நகரில் 50 மீட்டரும், கிராமங்களில் 100 மீட்டரும் தொலைவில் இருக்க வேண்டும். இந்த விதிகளை மீறி பல கடைகள் இயங்குகின்றன. இவற்றை அகற்ற பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம். புதிய விதிமுறையின்படி, கடைக்கு பிறகு அமைந்த பள்ளி, கோவில் இருந்தாலும் புகார் வந்தால் 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு (District Collector action) பிறப்பிக்க வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக அகற்றப்படும் எனவும் தமிழக அரசு (Tamilnadu Government) தெரிவித்துள்ளது.

Comments