TV9 Tamil
June 19, 2025 at 12:51 PM
சென்னையில் ஜூன் மாத தொடக்கத்தில் தினசரி நகரின் ஒரு சில இடங்களில் சூறைக்காற்றுடன் நல்ல மழை பதிவானது. ஆனால் கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. ஜூன் 18 2025 தேதியான நேற்று 38.8 டிகிரி செல்சியஸ் சென்னை மீனம்பாக்கத்தில் பதிவாகியுள்ளது.