
Path Of Imaan
June 11, 2025 at 05:13 AM
🔥ஈத்தாமொழி முஸ்லிம் ஜமாத்🔥
MEHA Charitable Trust மற்றும் ஈத்தாமொழி ஜமாத் சார்பாக 2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் 10-ம், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டி, வாழ்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது👇
ஒரு ஜமாத்தின் முதுகெலும்பே அந்த ஊரில் உள்ள செயல்மிக்க இளைஞர்கள் தான்.
அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிய ஜமாத்தாக இருந்தாலும் ஈத்தாமொழி ஜமாத்தின் இளைஞர் கூட்டம் கடந்த 25 வருடமாக அந்த ஊரின் பாதுகாவலர்களாகவும் ஜமாத்தின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து வருகின்றார்கள்.
உதாரணத்திற்கு அந்த ஊரில் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அந்த ஜனாஸாவுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமை அந்த ஊர் இளைஞர்களே ஜனாஸாவை குளிப்பாட்டுதல் குழி தோண்டி அடக்கம் பண்ணுதல் அனைத்தும் சிறப்பாக செய்து முடிக்கின்றார்கள்.
ஈத்தாமொழி ரஹ்மானியா இளைஞர் மன்றத்தாரால் கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் நிகழ்ச்சிகள் நேற்றோடு சிறப்பாக முடிவடைந்தது.
ஒவ்வொரு வருடமும் பெருநாட்களிலும் 4 நாட்கள் மார்க்கம் சம்பந்தமான மேடை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் 4 நாள் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி சிறுவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தி பரிசளித்து கொண்டாடி வருகின்றார்கள்.
ஈத்தாமொழி ஊர் சமூக இளைஞர்களே உங்களது ஒற்றுமைக்கு பாராட்டுக்கள் என்றுமே ஊர் விஷயத்தில் இயக்க ரீதியாகவோ கட்சி ரீதியாகவோ பிரிந்து விடாதீர்கள் இளைஞர்களின் ஒற்றுமை தான் சமுதாய முன்னேற்றத்தின் பலம்.
ஐயா அப்துல் கலாம் கூறியது போன்று ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் தான் இருக்கிறது.
அதேதான் அவர் அவர் சொந்த ஊருக்கும் பொருந்தும்.
இளைஞர்களே துவண்டு விடாதீர்கள் ஒற்றுமையாக நம் முஹல்லாவின் முன்னேற்றத்திற்காக எந்த விஷயமானாலும் விட்டுக் கொடுத்து பாடுபடுவோம்.
எந்த விமானமும் ஓடுபாதை முடிந்து விட்டது என்று நின்று விடுவதில்லை. அங்கிருந்து தான் அது பறக்க ஆரம்பிக்கிறது.
எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் இடம் தான் ஒரு புதிய துவக்கத்தின் ஆரம்பம்..
கல்லி மட்டுமே ஒரு சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் அந்த வகையில் நீங்கள் உங்கள் முகவல்லாவில் செய்து கொண்டிருக்கும் இந்த உலகக் கல்வி மற்றும் மார்க்க கல்வியை மேம்படுத்த மேன்மேலும் முயற்சி செய்யுங்கள்.
உங்கள் முஹல்லாவில் உள்ள நன்றாக படிக்கக்கூடிய ஏழை மக்களின் கல்வி விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
இந்த சமூகப் பணிக்கான நற்கூலி அளப்பரியது.
இந்த ஹஜ் பெருநாள் விழாவில்
💐💐சாதனை மாணவி இருவருக்கு 💐💐
2024 - 25 ஆம் கல்வி ஆண்டில் 10-ம், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஈத்தாமொழி முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்த முதல் மதிப்பெண் பெற்ற👇
💐💐சாதனை மாணவி💐💐
ASHMA MARYAM. M
441 / 500
மற்றும்
💐💐சாதனை மாணவி💐💐
NIZMA. S
545 / 600
அவர்களை MEHA Charitable Trust மற்றும் ஈத்தாமொழி முஸ்லிம் ஜமாத் சார்பாக ஜமாத் தலைமை நிர்வாகிகள் மாணவிகளை பாராட்டி வாழ்த்தி இந்நிகழ்ச்சியில் நினைவு கேடயம் வழங்கினார்கள்.
ஜமாத் தலைமைக்கும் மாணவிகளுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்💐
அபூபக்கர் சித்திக்.
MEHA Charitable Trust
கோட்டார்.
❤
❤️
😂
3