Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 19, 2025 at 01:22 PM
🎬From The Desk of கட்டிங் கண்ணையா🔥 கூல் சுரேஷ் திறந்து வச்ச சென்னை ஏர்போர்ட் பி வி ர் தியேட்டரை மூட முடிவு சென்னை விமான நிலையத்தின் பல்மட்ட வாகன நிறுத்துமிடத்துடன் (MLCP) இணைந்த வணிக வளாகமான ஏரோஹப்பில் (Aerohub) செயல்பட்டு வரும் ஐந்து திரைகள் கொண்ட PVR INOX மல்டிபிளக்ஸ், மூடப்படும் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI), விமான நிலையங்கள் ஆணையச் சட்டம் 1994-ன் கீழ் திரையரங்குகளை இயக்குவது அனுமதிக்கப்பட்ட செயல்பாடு அல்ல என்று முன்னரே முடிவு எடுத்துள்ளதே இதற்கு காரணம். ஆனாலும், சென்னை ஐகோர்ட் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், மே 29, 2025 அன்று PVR Inox ஏரோஹப்பில் தொடர்ந்து செயல்பட அனுமதி கோரி AAI-க்கு அளித்த மனுவை பரிசீலித்து, சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி முடிவெடுக்கும் வரை தற்போதைய நிலையே (status quo) தொடர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
Image from Aanthai Reporter News Channel: 🎬From The Desk of கட்டிங் கண்ணையா🔥 கூல் சுரேஷ் திறந்து வச்ச சென்னை ஏ...

Comments