
Aanthai Reporter News Channel
June 20, 2025 at 07:01 AM
🦉
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ் நாடு சினிமா
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
* இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்முவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது; “ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி:
* இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;- “ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவரது வாழ்க்கையும், தலைமைத்துவமும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. பொது சேவை, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை அனைத்து மக்களுக்கும் நம்பிக்கை மற்றும் பலத்தின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்க அவர் எப்போதும் பாடுபட்டுள்ளார். மக்கள் சேவையில் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை பெற கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
* மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தேசத்திற்கும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சேவை செய்வதில் உங்கள் அர்ப்பணிப்பு ஊக்கம் அளிக்கிறது. நிர்வாக துறையிலும், பொதுச்சேவையிலும் உங்களின் அனுபவத்தின் பலனை நாடு பெறுகிறது. நீங்கள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன்.
* ராகுல்காந்தி வாழ்த்து:
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன்.
* அண்ணாமலை
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது தலைமைத்துவம் ஞானத்தையும், நமது நாட்டின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத உறுதியையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும், தேசத்திற்கு அவர் தொடர்ந்து சேவை செய்யவும் பிரார்த்திக்கிறேன்.
* டிடிவி. தினகரன்
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
திரவுபதி முர்முவை பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
