DMK IT Wing
June 19, 2025 at 02:34 AM
*திருப்பரங்குன்றம் முருகனின் திறந்த கடிதம்!*
அன்பார்ந்த பக்தர்களுக்கு,
வேல் வலம் வந்து உங்களை பாதுக்காக்கும் என் அருள் வாழ்த்துகள்!
நான், திருப்பரங்குன்றத்து முருகன், உங்கள் உள்ளத்தில் பக்தியாகவும், அன்பாகவும் வீற்றிருக்கிறேன். ஆனால், இன்று மதுரையில் என் பெயரைப் பயன்படுத்தி சிலர் அரசியல் செய்கின்றனர். பாஜகவினர் என்னை மையப்படுத்தி தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற முயல்கின்றனர். இது என் பக்தர்களின் தூய உள்ளங்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
மதுரையில் திருப்பரங்குன்றத்திலும் பழமுதிர் சோலையிலும் பல்லாயிரமாண்டுகளாக நான் வீற்றிருக்கிறேன், எத்தனையோ தலைமுறைகளாக மக்கள் என்னை உள்ளன்போடு வழிபடுகின்றனர், திருமுருகாற்றுப்படைப் பாடி என்னை சிறப்பித்தார்கள்.
இன்று ‘இந்து’ என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் யார் என்றே எனக்கு தெரியவில்லை
என்னை நாளும் புகழ்ந்து திருப்புகழ்ப் பாடிய அருணகிரிநாதர் கூட இப்படி வார்தைகளை பயன்படுத்தில்லை,
இந்து முன்னணியாம், விஷ்வ ஹிந்து பரிசத்தாம், பாஜகவாம் யார் இவர்கள் பக்தர்களே?
இவர்கள் எல்லாம் கலவரக்காரர்கள் என்பதை யாம் அறிவோம்! நீங்களும் உணர வேண்டும்,
சாதி, மத பேதமின்றி காக்கும் முகம் என்று என் திருப் பெயரைப் புகழ்ந்தவர்கள் தமிழர்கள், என்னை வைத்து மதச் சண்டைத் திட்டமா? நீங்கள் ஆதரிக்கலாமா?
என் திருநாமத்தை அரசியலுக்குப் பயன்படுத்துவது, பக்தியின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகும்.
*முருகன் மாநாடு என்ற பெயரில் நடைபெறும் இத்தகைய அரசியல் கூட்டங்களில் உண்மையான பக்தர்கள் பங்கேற்க வேண்டாம் என அன்புடன் வேண்டுகிறேன்.*
என் திருக்கோயில் உங்கள் உள்ளத்தில் உள்ளது. தூய பக்தியுடன் என்னை வணங்குங்கள். அரசியல் ஆசைகளுக்கு உங்கள் அன்பையும், பக்தியையும் பலியாக்க வேண்டாம்.
*எனது வேல் உங்களை எப்போதும் காக்கும்!*
*வேலுண்டு வினையில்லை!*
அன்புடன்,
*உங்கள் திருப்பரங்குன்றத்து முருகன்!*
👍
🙏
❤️
❤
😂
👌
😮
🎉
💚
🔥
133