Kanimozhi Karunanidhi
June 12, 2025 at 03:14 AM
சென்னை தெற்கு மாவட்ட தி.மு. கழகத்தின் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் சார்பில், தலைவர் கலைஞர் அவர்களின் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட 'மாற்றுத்திறனாளர்களும் கலைஞர் எனும் மாடவிளக்கும்' என்ற நிகழ்வில் பங்கேற்று 1500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினேன்.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமிகு தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திருமிகு கனிமொழி NVN. சோமு, சட்டமன்ற உறுப்பினர் திரு AMV. பிரபாகர்ராஜா, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் திரு. தீபக்நாதன், கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.
🙏
❤️
👍
😮
43