Daily One Missionary Biography
Daily One Missionary Biography
May 25, 2025 at 09:18 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *மே 25* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *பில்லி சண்டே Billy Sunday* 🛐 மண்ணில்: 19-11-1862 விண்ணில்: 06-11-1935 ஊர்: அயோவா நாடு: அமெரிக்கா தரிசன பூமி : அமெரிக்கா பேஸ்பால் என்பது ஒருவகை விளையாட்டு. கிரிக்கெட் எவ்வளவு பிரபலமடைந்துள்ளதோ, அதுபோலவே அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டும் பிரபலமானது. பில்லி சண்டே ஒரு விளையாட்டுப் பிரியர். 1800ம் ஆண்டுகளுக்குப் பிறகு பேஸ்பால் விளையாட்டு பிரபலமடைந்தபோதிலும் திறமைமிக்க முன்னணி வீரராக விளங்கினார் பில்லி. இவர் புகழ் எங்கும் பரவ ஆரம்பித்தது. 1886 ஆம் ஆண்டில் அவர் சிகாகோவில் உள்ள பசிபிக் கார்டன் மிஷனில் அமைந்துள்ள திருச்சபையில் கலந்துகொள்ளத் தொடங்கினார். இந்த நேரத்தில்தான் அவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார். பில்லியின் வாழ்வு மாற்றம் பெற்றது. 1891 ஆம் ஆண்டில், பேஸ்பால் விளையாட்டை விட்டுவிட்டு ஒய்.எம்.சி.ஏ. (யங் மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன் - இளம் ஆண்கள் கிறிஸ்தவ சங்கம்) உடன் பணியாற்ற தொடங்கினார் பில்லி. பின்னர் அவர் சாப்மென் என்பவருடன் ஊழியத்தில் இணைந்தார். சொற்ப வருமானம் மிகுந்த கஷ்டத்தைக் கொடுத்தது. அன்றாடம் திண்டாட வேண்டிய அவல நிலை. அச்சமயம் பேஸ்பால் கிளப்புகள் பல அவரை அழைத்தன. அதிக சம்பளம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். பில்லியோ ஊழியத்தில் முன்வைத்த காலைப்பின்வைக்கவில்லை. பில்லியின் உத்தம குணத்தை ஆண்டவர் அங்கீகரித்து அவரைப் பயன்படுத்த ஆரம்பித்தார். விரைவிலேயே அமெரிக்க தேசத்தின் பிரபலமான ஒரு பிரசங்கியாராக மாறினார். இவரின் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கானோர் பல பாகங்களிலிருந்தும் திரண்டு வந்தனர். அந்நாட்களில் அமெரிக்காவில் மதுக்கடைகள் எங்கு பார்த்தாலும் நிரம்பியிருந்தன. குடிவெறியினால் பல குடும்பங்கள் சீரழிந்தன. இந்நிலையை மிகுந்த வன்மையாகக் கண்டித்தார் பில்லி. இதனால் மதுபான தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு மக்கள் புதுவாழ்வு வாழத் தொடங்கினர். இவ்வுலகில் தனது ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த பில்லி சண்டே, 1935 ஆம் ஆண்டில் பரலோக வாசஸ்தலத்தில் தனது இறைவனை அடைய இவ்வுலகத்தை விட்டு சென்றார். 🚸*அன்பரே! உங்கள் புகழ் அனைத்தையும் இயேசுவின் பணிக்கு செலவிட முடியுமா?* 🚸 🛐 *"ஆண்டவரே! என் வெற்றிகள் அனைத்தையும், உம் பாதம் அர்ப்பணித்து உந்தன் சேவை செய்திடுவேன். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603) ******* BenjaminForChrist @ +91 9842513842
🙏 ❤️ 3

Comments