
Daily One Missionary Biography
May 26, 2025 at 01:43 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *மே 26* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *நிகோலாஸ் வான் ஜின்செண்டார்ஃப் Nikolaus von Zinzendorf* 🛐
மண்ணில் : 26-05-1700
விண்ணில் : 09-05-1760
நாடு : ஜெர்மனி
தரிசன பூமி: ஜெர்மனி
“உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?”.
இவ்வாக்கியத்தை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கவும், கேட்டிருக்கவும் கூடும். ஆனால், இது ஒரு கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தியது என்றும், அந்த சமூகம் அநேக மிஷனெரிகளை உருவாக்கி அனுப்பியது என்றும் உங்களுக்குத் தெரியுமா?
ஹெர்ன்ஹட் சமூகம். மொரோவியன் கூட்டத்தார். பலவிதமான துன்பங்களும், பாடுகளும் நிறைந்த, மிகவும் கடினமான, தேசங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க தம்மிலிருந்து பல மிஷனெரிகளை அனுப்பினவர்கள் இவர்கள்.
இம்மிஷனெரி ஸ்தாபனத்தை ஆரம்பித்தவர் ஓர் பெரிய பிரபு, ஒரு உன்னத குடும்பத்தில் பிறந்த அவர், சிறு வயதிலேயே இறையியல் மற்றும் மதப் பணிகளில் வாஞ்சையைக் காட்டினார். படிப்பை முடித்த பின்னர், ஒரு நாள் டசெல்டார்ஃபில் உள்ள கலை அருங்காட்சியத்திற்கு அவர் சென்றார். அங்கே பற்பல படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. திடீரென்று ஒரு படம், இவரின் கண்ணில் பட்டது. அதிகமாக இவர் இதயத்தை அப்படம் ஊடுருவி பாய்ந்தது. அது சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவப்படம். அப்படத்தின் கீழ் இந்த வாசகம். "இவையெல்லாவற்றையும் உனக்காக செய்தேன். நீ எனக்காக என்ன செய்திருக்கிறாய்?"
இதைப் பார்க்கப் பார்க்க, அவரின் உள்ளம் உருகியது. இதயம் இளகியது. கண்களில் கண்ணீர் வழிந்தது. சிந்தனையில் சிறப்பான திட்டம் மலர்ந்தது. தன்னை இயேசுவுக்கு கையளித்தார் அவர். நிகோலாஸ் வான் ஜின்செண்டார்ஃப் என்பவரே அவர். ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக அவர் தனது பாட்டியின் ஸ்தலத்தை வாங்கி அதற்கு ஹெர்ன்ஹட் என்று பெயரிட்டார். அங்கு வந்துள்ளவர்கள் ஒரு சமூகமாகி, அநேக மிஷனெரிகளை பல நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவரும் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் சென்று அந்த மிஷனெரி ஊழியங்களை ஊக்குவித்தார்.
மொரேவிய சங்கத்தால் பேராயராக அபிஷேகம் பண்ணப்பட்ட இவர், 18 ஆம் நூற்றாண்டின் ஜெர்மன் திருச்சபை மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
🚸*அன்பரே! இயேசுவின் வார்த்தைகள் உங்களை எதைச் செய்ய தூண்டியிருக்கிறது?* 🚸
🛐 *"ஆண்டவரே! ஜின்செண்டார்ஃப்வைப் போன்று என்னை உம் பணி செய்ய அர்ப்பணிக்கிறேன். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603)
*******
BenjaminForChrist @ +91 9842513842
🙏
😄
5