
Daily One Missionary Biography
June 6, 2025 at 01:01 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜூன் 06* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *ஜார்ஜ் வில்லியம்ஸ் George Williams* 🛐
மண்ணில்: 11-10-1821
விண்ணில்: 06-11-1905
ஊர்: சோமர்செட்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : உலகமெங்கும்
உலகில் இதுவரை எண்ணற்ற நிறுவனங்கள் தோன்றியுள்ளன. ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குறிக்கோள்கள் உண்டு. ஆனால், இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள், மனிதருக்கு வளத்தையும், உலகிற்கு முன்னேற்றத்தையும் அளிக்கின்றன.
"உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு மனதோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு இருதயத்தோடும் அன்புகூருவாயாக." இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டு 1844ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதே அகில உலக கிறிஸ்தவ இளைஞர் இயக்கமாகும் (YMCA-ஒய்.எம்.சி.எ. "யங் மென்ஸ் கிறிஸ்டியன் அஸ்ஸோசியேஷன்").
ஜார்ஜ் வில்லியம்ஸ், இளம் வயதிலேயே மிகவும் சுறுசுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராக கிறிஸ்தவ ஒழுக்கத்தில் வளர்க்கப்பட்டவர். கிறிஸ்தவ இளைஞர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற வாஞ்சை அவருக்குள் காணப்பட்டது. தன் விருப்பத்தை ஜெபத்தின் மூலமாக ஆண்டவருக்கு தெரியப்படுத்தினார். அவரின் ஜெபம் கேட்கப்பட்டது.
ஜூன் 6, 1844ஆம் ஆண்டு லண்டன் மாநகரத்தில் மிகுந்த ஜெபத்துடன் ஒய்.எம்.சி.எ. என்ற அமைப்பை உருவாக்கினார். உலகத்தின் எல்லா பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ இளைஞர்களையும், இயேசு கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தி, அவரை தங்கள் சொந்த மீட்பராகவும், கடவுளாகவும் ஏற்றுக்கொண்டு, அவரின் அரசை விரிவுபடுத்த தங்களை அர்ப்பணிக்க ஒன்றுபட்டு பாடுபடுவதே இச்சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
1855ஆம் வருடம், இது பன்னாட்டு சங்கமாக உயர்வு பெற்று, இன்று சுமார் 150 நாடுகளில், கிளை சங்கங்களை ஆரம்பித்து, சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. மனிதனின் உடல், உள்ளம், ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாக முழுமையடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. உலக அமைதி, உலக சமத்துவம், சமூக நீதி போன்றவை வளர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இச்சிறந்த நிறுவனத்தை ஆரம்பித்த வில்லியம்ஸ் இளைஞர்களின் வழிகாட்டியாக இவ்வுலகில் வாழ்ந்து காட்டினார்.
🚸*அன்பரே! உமது பணியினால் யாருடைய வாழ்வு மேம்படுகிறது?* 🚸
🛐 *"ஆண்டவரே! என் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு சிந்தையோடும் உம்மிடத்தில் அன்புகூருவேன். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
நன்றி: மனிதர்களைத் தேடிய மாமனிதர்கள் (திரு. V.வீர சுவாமிதாஸ் @ +91 9884120603)
*******
BenjaminForChrist @ +91 9842513842
🙏
😂
4