Daily One Missionary Biography
Daily One Missionary Biography
June 13, 2025 at 01:05 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *ஜூன் 13* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *ஆன் லூதர் பேக்பி Anne Luther Bagby* 🛐 மண்ணில்: 20-03-1859 விண்ணில்: 22-12-1942 ஊர்: டெக்சாஸ் நாடு: அமெரிக்கா தரிசன பூமி : பிரேசில் ஆன் லூதர் பேக்பி (Anne Luther Bagby) பிரேசில் நாட்டில் ஊழியம் செய்த அமெரிக்க பாப்டிஸ்ட் மிஷனெரியாவார். கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், தனது பதினோராம் வயதில் ஞானஸ்நானம் பெற்று, எப்பொதும் தேவ ஊழியத்தின்மேல் வாஞ்சையாய் இருந்தார். 1879ஆம் ஆண்டு, பேலர் ஃபீமேல் காலேஜிலிருந்து (பேலர் பெண்கள் கல்லூரி) பட்டம் பெற்ற பின், ஆசிரியையாக பணி புரிந்தார். 1881ஆம் ஆண்டு மிஷனெரி அழைப்பை பெற்ற வில்லியம் பக் பேக்பி (William Buck Bagby) என்பவரை மணம் முடித்தார். அதே ஆண்டில், இந்த புதுமண தம்பதியர் "ஃபாரின் மிஷன் போர்டு"-இன் (வெளிநாட்டு மிஷன் வாரியம்) சார்பாக பிரேசில் நாட்டிற்கு மிஷனெரிகளாக புறப்பட்டனர். அந்நாட்டில் கத்தோலிக்க மார்க்கம் மிக பரவலாய் இருந்த பஹியாவில் (Bahia) அவர்கள் குடியேறினர். ஊழியம் செய்த இரண்டு ஆண்டுகளில் இந்த தம்பதியர் அங்கு போர்த்துகீசிய மொழியில் நடத்தப்படும் முதல் பாப்டிஸ்ட் சபையை நிறுவினர். பின்பு, 1884ஆம் ஆண்டு ரியோ டி ஜெனெரோவிற்கு (Rio de Janeiro) சுவிசேஷத்தை எடுத்துச் சென்றனர். அங்கு இத்தம்பதியர் கத்தோலிக்கர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்தனர். அவர்கள் நடத்திய கூட்டங்களில் ஒருவர் கூட கலந்துகொள்ள வரவில்லை. ஆகையால் கூட்டத்தை ஈர்ப்பதற்காக அவர்கள் இசைக்கருவிகளை வாசித்து, பின்பு மெதுவாக சத்திய வேதத்தை பிரசங்கித்தனர். படிப்படியாய் கர்த்தர் அவர்கள் சபையில் ஆத்துமாக்களை சேர்த்தார். உள்ளூர் பாதிரியார்களின் துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் தொடர்ந்து உண்மையாய் ஊழியம் செய்தனர். சத்துருவின் தாக்குதல்கள் அதிகரித்தாலும், ஊழியமும் செழித்தோங்கியது. 1901ஆம் ஆண்டில் இவர்கள் சாவ் பாவ்லோ (Sao Paulo) என்ற ஊரில் குடியேறி, அங்கு அநேக சபைகளையும் பள்ளிகளையும் நிறுவினர். தேவனுடைய ராஜ்யம் கட்டப்பட பல கிறிஸ்தவ மாநாடுகளை ஒழுங்கு செய்தனர். ஆன் அவர்கள் வேதாகமத்திலுள்ள குணசாலியான ஸ்திரீயை போலவே திகழ்ந்தார். தன் பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்த்து, குடும்ப கடமைகளை நிறைவேற்றி, தன் கணவருக்கு ஊழியத்தில் உதவி செய்து, பிரேசில் நாட்டிலேயே மிகப்பெரிய பள்ளிக்கூடத்தையும் நடத்தி வந்தார். அதுமட்டுமல்லாமல், இவர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார் மற்றும் பெண்கள் மிஷனெரி கூட்டங்களில் பிரசங்கிப்பதில் உற்சாகமாக பங்கேற்றினார். எல்லாவற்றிற்கும் மேலாக, துன்பங்கள் மத்தியிலும், தன் பிள்ளைகளில் இருவரை இழந்தபோதும் மன உறுதியுடன் நின்று முறுமுறுக்காமலும், குறைசொல்லாமலும் இருந்தார். ஆன், வில்லியம் பேக்பி தம்பதியர் தென் அமெரிக்காவில் மிக நீண்ட காலம் ஊழியம் செய்த தம்பதியர்களில் ஒருவர். அவர்களின் ஒன்பது குழந்தைகளில் ஐந்து பேர் மிஷனெரிகளாக பிரேசிலில் பணியாற்றுவதன் மூலம் இத்தம்பதியர் விட்டு சென்ற ஊழியம் பரம்பரையாய் தொடர்ந்தது. 🚸*பிரியமானவர்களே, உங்கள் எல்லா கடமைகளையும் கர்த்தருக்கென்றே செய்வது போல மனப்பூர்வமாய் நிறைவேற்றுகிறீர்களா?* 🚸 🛐 *"கர்த்தாவே, என் வாழ்க்கையின் அனைத்து பொறுப்புகளிலும் உண்மையாய் வாழ நீரே எனக்கு உதவி செய்யும். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* BenjaminForChrist @ +91 9842513842 ******* நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏 3

Comments