
Daily One Missionary Biography
June 15, 2025 at 12:12 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜூன் 15* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *ஆண்டனி நோரிஸ் க்ரோவ்ஸ் Anthony Norris Groves* 🛐
மண்ணில்: 01-02-1795
விண்ணில்: 20-05-1853
ஊர்: ஹாம்ப்ஷையர்
நாடு: இங்கிலாந்து
தரிசன பூமி : ஈராக் மற்றும் இந்தியா
ஆண்டனி நோரிஸ் க்ரோவ்ஸ் ஒரு பல் மருத்துவர். தனது வாலிப வயதில் ஒரு வைராக்கியமான கிறிஸ்தவராய்திகழ்ந்தார். அவர் தனது 21ஆம் வயதில் இயேசுவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக்கொண்டு புதிய ஏற்பாட்டை பற்றி ஆழமான புரிதலை கொண்டிருந்தார். தன் பல் மருத்துவ படிப்பை படித்துக் கொண்டிருக்கும்போதே, இயேசுவின் மலை பிரசங்கத்தின் அடிப்படையில் “கிறிஸ்டியன் டிவோடெட்னெஸ்” (Christian Devotedness - கிறிஸ்தவ பக்தி) என்ற சிறிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார். தனது புத்தகத்தின் மூலமாய், விசுவாசிகள் தங்களையும் தங்களுக்குறியவைகள் அனைத்தையும் உலகெங்கிலும் சுவிசேஷத்தை அறிவிக்க அர்ப்பணிக்குமாறு ஊக்குவிக்க முனைந்தார். அந்த புத்தகத்தினால் தொடப்பட்டு தமது வாழ்வை முழுவதுமாய் இயேசுவுக்கென்று அர்ப்பணித்துக் கொண்ட அநேக மக்களில் சிறந்த தேவமனிதரான ஜார்ஜ் முல்லர் ஒருவர்.
1829ஆம் ஆண்டு, க்ரோவ்ஸ் தனது இலாபகரமான வேலையை விட்டுவிட்டு, தேவனின் ஊழிய அழைப்பை ஏற்று ஈராக்கின் பாக்தாத் நகருக்கு சென்றார். அங்கு இஸ்லாமியர்கள் மத்தியில் முதல் புரோட்டஸ்டன்ட் ஊழியத்தை (மிஷனை) நிறுவினார். உள்ளூர் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி கற்பிக்க தொடக்கப் பள்ளிகளையும் நிறுவினார். அவர்கள் பாக்தாத்திற்கு வந்து ஒரு வருடம் சென்ற பின், உள்நாட்டுப் போர் ஒன்று வெடித்தது. அந்த சமயத்தில் அவர் தனது மனைவியையும் புதிதாய் பிறந்த மகளையும் இழக்ககொடுத்தார். உள்நாட்டுப் போர் ஏற்படுத்திய பேரழிவின் மத்தியிலும், க்ரோவ்ஸ் மேலும் சிலருடன் சேர்ந்து சுவிசேஷ பணிகளைத் தொடர்ந்தார். பின்பு, 1833ஆம் ஆண்டு அவர் இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் கல்கத்தாவின் சில பகுதிகளில் அலெக்சாண்டர் டஃப் (Alexander Duff) என்ற மிஷனரியுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். பின்னர், மெட்ராஸ் சென்றடைந்து ஒரு மிஷனரி குழுவைத் துவக்கி, தமிழ்நாடு மற்றும் கோதாவரி டெல்டாவின் பல பகுதிகளில் மிஷனரி பணிகளை மேற்கொண்டார்.
மிஷனரி முயற்சிகளில் க்ரோவ்ஸின் தாக்கத்தின் நிமித்தம் "விசுவாச ஊழியத்தின் தகப்பன்" என்று அழைக்கப்பட்டார். மேற்கத்திய சபைகளின் பாரம்பரியத்தை புறக்கணித்து, கிறிஸ்து மற்றும் அவருடைய அப்போஸ்தலர்களின் போதனைகளையும் நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றுமாறு அவர் இளம் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார். சபைகளில் உள்ளூர் தலைமைத்துவ வளர்ச்சியை அவர் ஆதரித்தார். உள்ளூர் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய திறன்களையும் ஊழியத்தையும் வளர்த்துக் கொள்ள ஒருவருக்கொருவர் உதவுமாறு அவர்களை ஊக்குவித்தார். அவரது புரட்சிகரமான கருத்துகள், விசுவாசத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஒரு புதிய தலைமுறையை பிறப்பித்தது. புதிய ஏற்பாட்டை மிஷனரி பணிகளின் நடைமுறை கையேடாக பயன்படுத்த வேண்டும் என்ற அவரது யோசனை, ஜான் கிறிஸ்டியன் அருளப்பன், பகத் சிங் மற்றும் வாட்ச்மேன் நீ போன்ற பல பழங்குடிக் கிறிஸ்தவ தலைவர்களின் ஊழியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
🚸*பிரியமானவர்களே, உங்கள் ஊழியம் ‘விசுவாசக் கொள்கைகளை’ அடிப்படையாகக் கொண்டுள்ளதா?* 🚸
🛐 *"கர்த்தாவே, நான் எதை சாதித்தாலும், அவை உங்கள் வார்த்தையின் தரத்தின்படியே இருப்பதாக. ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
*******
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
3