Daily One Missionary Biography
Daily One Missionary Biography
June 16, 2025 at 02:52 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *ஜூன் 16* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *ஆனி மார்கரெட் கிரீன் Annie Margaret Green* 🛐 மண்ணில்: 1844 விண்ணில்: 1878 ஊர்: பெட்ஃபோர்ட் நாடு: இங்கிலாந்து தரிசன பூமி : ஜூலூலாந்து, தென்னாபிரிக்கா ஆனி மார்கரெட் கிரீன் என்பவர் தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜூலூலாந்தில் மிஷனெரியாக பணியாற்றிய எட்வர்ட் வில்கின்ஸன் (Edward Wilkinson) என்பவரின் துணைவியார். அவர் இங்கிலாந்தில் ஒரு செல்வந்த வணிகக் குடும்பத்தில் பிறந்தவரானாலும், தனது கணவருடன் மிஷனெரி ஊழியத்திற்கென தேவ அழைப்பை பெற்றபோது, எல்லா வசதிகளையும் துறந்தார். ஆகவே, 1870ஆம் ஆண்டு வில்கின்ஸன் தம்பதியர் குடும்பமாய் தென்னாப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, மூன்று மாத கடினமான கப்பல் பிரயாணத்திற்குப் பிறகு நட்டால் (Natal) என்ற ஊரை வந்தடைந்தனர். அங்கிருந்து ஜூலூலாந்தின் மையப் பகுதிக்கு சென்று "க்வாமக்வாஸா" (Kwamagwaza) என்ற ஊரில் ஊழிய பணிதளத்தை நிறுவினர். ஜூலூவின் பழங்குடியின மக்கள் கொடுமையான காட்டுமிராண்டிகளாக இருந்தனர் மற்றும் தங்கள் மூதாதையரின் ஆவிகளை வழிபட்டு வந்தனர். ஜூலூலாண்டில் ஆரம்ப நாட்கள் ஆனிக்கு சவால் நிறைந்தவையாகவும் ஏமாற்றங்கள் நிறைந்தவையாகவும் இருந்தன. அம்மக்களிடம் உரையாடவும் கிறிஸ்துவுக்குள் வழிநடத்தவும் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ஆனியோ பல நற்குணங்கள் நிறைந்தவராய் இருந்தபடியால், அவர்கள் வாழ்க்கையை மாற்ற தன் முழு பெலத்துடன் பிரயாசப்பட்டார். ஜூலூ க்ரால்களில் (Zulu kraals - என்றால் ஜூலூ கிராமங்களில்) சுவிசேஷத்தை பிரசங்கிக்க அநேக மைல்தூரம் ஆனியும் அவர் கணவரும் நடந்தே சென்றனர். சில நேரங்களில், எட்வர்ட் நீண்ட பயணங்களில் இருந்தபோது, ஆனி முழு மிஷன் நிலையத்தையும் தனியொருவராக நிர்வகித்தார். தனது வீட்டு வேலைகளை முடித்தபின், மதியம்வரை பள்ளியில் பாடம் கற்பித்து, பின்பு பெண்களை கூட்டிச்சேர்த்து, இரவுவரை அவர்களுக்கு தேவ வார்த்தையை போதித்தார். உள்ளூர் மக்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்கினது மட்டுமல்லாமல் பொறுமையுடன் பல ஜூலூ பணிப்பெண்களுக்கு செவிலியர் பயிற்சியையும் அளித்தார். அங்கு ஆண்டவரின் வீடு கட்டுமான பணிகள் நடந்தபோது, கட்டுமான பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கடினமாய் உழைத்து, மண் செங்கற்களை செய்தார். அவர் நேரடி ஊழியத்தில் உண்மையும் இயல்பறிவு உடையவருமாய் திகழ்ந்தார். ஊழியம் செழித்தோங்கினாலும், அறியாமையில் மூழ்கிக்கிடந்த முரட்டுத்தனமான காட்டுமிராண்டிகளாக இருந்த அந்த பழங்குடி மக்களுக்கு, அனுதினமும், குறிப்பாக எட்வர்ட் வெளியிடங்களுக்கு சென்றிருந்தபோது, ஆனி அஞ்சியே வாழ்ந்தார். செட்டவாயோ (Cettewayo) என்ற ஜுலூ தலைவன் சகிப்புத்தன்மையற்றவன், மிஷனெரிகளை கடுமையாக எதிர்த்தவன். சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டி, பல கிறிஸ்தவர்களை கொன்று குவித்தது மட்டுமல்லாமல், அவன் அநேக கிறிஸ்தவ பெண்களை பொது இடங்களில் பாலியல் வன்கொடுமையும் செய்தான். அப்போதும் கூட, ஆனி துணிச்சலான பெண்மணியாய் திகழ்ந்தபடியால், செட்டவாயோவின் சகோதரியான உபாட்டோநைல் (Ubatonyile) என்பவரை சந்தித்து, அவரை கிறிஸ்துவுக்கென ஆதாயப்படுத்தினார். அநேக கஷ்டங்கள் மத்தியிலும் தன் உயிரையும் துச்சமென கருதி, ஜூலூ பெண்கள் இயேசுவின் பொறுமை நிறைந்த அன்பை ருசிக்க வழிவகுத்தார் ஆனி மார்கரெட் கிரீன். 🚸*பிரியமானவர்களே, உங்கள் ஊழியத்தில் நீங்கள் உண்மையுள்ளவராகவும் நடைமுறைக்குரியவராகவும் இருக்கிறீர்களா?* 🚸 🛐 *"கர்த்தாவே, என் விசுவாசத்தை நடைமுறைபடுத்த எனக்கு உதவியருளும். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* BenjaminForChrist @ +91 9842513842 ******* நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏 4

Comments