
Daily One Missionary Biography
June 17, 2025 at 01:42 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜூன் 17* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *அரபெல்லா மெரில் Arabella Merrill* 🛐
மண்ணில்: ~1865
விண்ணில்: -
ஊர்: இலிநோய்
நாடு: அமெரிக்க
தரிசன பூமி : இந்தியா
அரபெல்லா மெரில் என்பவர் "டிசைப்பிள்ஸ் ஆஃப் கிரைஸ்ட்" (Disciples of Christ - கிறிஸ்துவின் சீடர்கள்) என்ற அமைப்பின் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட முன்னோடி மருத்துவ மிஷனெரியாவார். ஆன் ஆர்பர் (Ann Arbor) என்னும் ஊரில் அவர் ஒரு மருத்துவ கல்லூரியில் மருத்துவம் கற்று, 1887ஆம் ஆண்டு மிக உயர்ந்த கௌரவ பட்டம் பெற்றார். பின்பு சிகாகோ மற்றும் மிஷிகன் ஆகிய ஊர்களின் மருத்துவமனைகளில் மருத்துவராக பணி புரிந்தார். அந்நாட்களில், இந்தியாவில் ஊழியம் செய்த பண்டித ராமாபாய் (Pandita Ramabai) என்பவரின் ஊழியத்தைப் பற்றி கேள்விப்பட்டார். பண்டித ராமாபாயின் சவால் நிறைந்த சாட்சி, மெரிலையும் அவரது மிக நெருங்கிய நண்பரான ஒலிவியா பால்ட்வினையும் (Olivia Baldwin) இந்தியாவிற்கு சென்று மருத்துவ மிஷனெரியாக தேவனை சேவிக்க ஊக்கமளித்தது.
1889ஆம் ஆண்டு அவர்கள் ஒன்றாக இந்தியா வந்தடைந்து, மத்திய இந்தியாவில் பிலாஸ்பூரில் (Bilaspur) தங்கள் பணியை துவங்கினர். நகரத்திலும், அதை சுற்றிலுமுள்ள கிராமங்களிலும் பிணியாளிகளுக்கு மருத்துவ பராமரிப்பு வழங்கி வந்தனர். அவ்விருவரும் சரீர பிரகாரமான சுகத்தை தாண்டி, ஆத்துமாவின் ஆவிக்குரிய நலன்மேல் நோக்கமாயிருந்தனர். எனவே, மருத்துவ சேவைகளுடன் எப்பொழுதும் வேதாகம போதனையும் கைகோர்த்து நடந்தது. இந்திய மக்களிடம் கிறிஸ்துவை அறிவிக்க மொழியை ஒரு தடையாக அவர்கள் கருதவில்லை. அவர்கள் நோயுற்றோரை பராமரிக்கும் வேளைகளில் அவர்களுடன் சேர்ந்து, எப்பொழுதும் ஒரு வேத வாசகர் இவ்வுலகில் கிறிஸ்து செய்தவற்றை மக்களுக்கு போதித்து வந்தார். ஒரு மருத்துவராக மெரிலின் வேலை மிகவும் கடினமானதாக இருந்தாலும், அவர் தனது அனைத்து கடமைகளையும் மிகுந்த அனுதாபத்துடனும் முழு அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார். அவர் தன் பொறுப்புகளை நிறைவேற்றிய விதம், கிறிஸ்துவானவர் ஜீவத்தண்ணீரண்டைக்கு களைப்புற்ற ஆத்துமாக்களை ஈர்த்த விதம் போலவே இருந்தது.
1894ஆம் ஆண்டின் இறுதிக்குள், மெரில் உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவை விட்டுசெல்ல நேர்ந்தது. குணமடைந்த பிறகு, அவர் அலாஸ்காவிற்கு (Alaska) சென்று பின்னர் கனடாவின் க்ளோன்டைக் (Klondike) என்ற ஊருக்கு சென்றார். அங்கு அவர் சில காலம் மிஷனெரி பணிகளை மேற்கொண்டார். மேலும் "கிறிஸ்டியன் விமன்ஸ் போர்ட் ஆஃப் மிஷன்ஸ்"-இன் (Christian Woman's Board of Missions - கிறிஸ்தவ பெண்கள் ஊழிய குழு) அமைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். உறுதியுடனும், வாஞ்சையுடனும் தேசமெங்கிலும் உள்ள சபைகளுக்கு சென்று, ஊழிய பணித்தளங்களில் சேவை புரிய அங்குள்ள வாலிப ஆண்மக்களையும் பெண்மக்களையும் ஊக்குவித்தார். அநேகருக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் வாழ்ந்த மெரில், இறுதிவரை உண்மையும் தாழ்மையும் உடைய தேவ ஊழியராக திகழ்ந்தார்.
🚸*பிரியமானவர்களே, ஆத்துமா குணமடைய வேண்டியவர்களுக்காக நீங்கள் அனுதாபப்படுகிறீர்களா?* 🚸
🛐 *"கர்த்தாவே, நான் என் கடமைகளை நிறைவேற்றும் விதம் கிறிஸ்துவை பிரதிபலிக்கிறதாய் அமையட்டும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
*******
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
2