Daily One Missionary Biography
June 17, 2025 at 11:09 PM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜூன் 18* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *ஆர்ச்சிபால்ட் ஃபோர்டர் Archibald Forder* 🛐
மண்ணில்: 1863
விண்ணில்: ~1920
நாடு: அமெரிக்க
தரிசன பூமி : அரபு நாடுகள்
ஆர்ச்சிபால்ட் ஃபோர்டர் என்பவர் (Archibald Forder), 13ஆண்டுகள் மத்திய கிழக்கு நாடுகளில், குறிப்பாக பாலஸ்தீனாவில் உள்ள அல்-கராக் அல்லது கேரக் (Al-Karak or Kerak) என்னும் ஊரில் ஊழியம் செய்த அமெரிக்க மிஷனெரியாவார். தனது எட்டு வயதில், ஃபோர்டர் மிஷனெரி கூடுகை ஒன்றில் கலந்து கொண்டார். ஆப்பிரிக்காவில் முன்னோடியாய் ஊழியம் செய்த ராபர்ட் மொஃபாத் (Robert Moffat) என்பவர் அக்கூடுகையில் தனது மிஷனெரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அன்றைய தினம் அவர் உள்ளத்தில் என்றும் தணிக்க முடியாத ஊழிய நெருப்பு ஒன்று பற்றி எரிய துவங்கியது. சில நாட்களுக்கு பின், ஃபோர்டர் கலந்துகொண்ட ஜெபாலயத்திற்கு சீனாவிலிருந்து ஒரு மிஷனெரிவருகைதந்தார். சீன தேசத்திற்கு மிஷனெரிகளாக வருமாறு இளம் வாலிப மகன்களை அவர் ஊக்குவித்தார். இதன் விளைவாக, தான் ஒரு மிஷனெரி ஆக வேண்டும் என்ற அவரது வாஞ்சை மேலும் வலுவடைந்தது.
1888ஆம் ஆண்டு மிஷனெரி பத்திரிகை ஒன்றில் அல்-கராக் (Al-Karak) என்னும் ஊரில் நடந்தேறும் ஊழிய பணிகளை பற்றி வாசித்துக் கொண்டிருந்தார். அதை வாசித்துக் கொண்டிருக்கும்போதே "அது உனக்காகவே" என்ற சத்தம் தொனிக்க கேட்டார். எனவே, சிலமாதகால மருத்துவ பயிற்சிக்குபின், தனது மனைவியுடன் கேரக் ஊருக்கு புறப்பட்டு சென்றார் ஃபோர்டர். அங்கிருந்த நாகரிகமற்ற முரட்டு மனிதர்களால் ஏற்பட்ட ஆபத்தின் மத்தியிலும், அவர்களை சாமர்த்தியமாய் கையாண்டார். அங்கிருந்த நோயாளிகளை அவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகளையும் வழங்கி வந்தார். அது அவருக்கு சுவிசேஷம் அறிவிக்க வாசலை திறந்து கொடுத்தது. 1892ஆம் ஆண்டு தனது மனைவியை இழந்தபோதிலும், ஃபோர்டர் தொடர்ந்து 1896ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனர்கள் மத்தியில் ஊழியம்செய்து அநேகரை கிறிஸ்துவுக்கென்று ஆதாயப்படுத்தினார்.
கேரக்கில் ஐந்தரை ஆண்டு கால ஊழியத்திற்கு பின், மத்திய அரேபியாவிற்கு சுவிசேஷத்தை எடுத்துச்செல்ல வாஞ்சித்தார். ஆதலால் 1900ஆம் ஆண்டு மோவாப் மற்றும் ஏதோம் பகுதிகளுக்கு அப்பாலுள்ள இடங்களை சென்றடைய அரேபிய பாலைவனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். அரபியர்கள் கிறிஸ்தவர்களை வெகுவாய் பகைத்தனர் என்றும் மத்திய அரேபியாவிற்கு அவர் மேற்கொள்ளும் பயணம் நிச்சயம் மரணத்தில் தான் முடியும் என்றும் எச்சரிக்கப்பட்டார். ஆனாலும் மனம்தளராமல் காஃப் (Kaf) மற்றும் ஜோவ்ஃப் (Jowf) போன்ற பிரதான அரேபிய நகரங்களில் சுவிசேஷத்தை பிரசங்கித்தார். இஸ்லாமியர்களாலும் நாகரிகமற்ற கும்பல்களாலும் அநேக முறை தாக்கப்பட்டு, ஒவ்வொருமுறையும் மரணத்திலிருந்து நூலிழையில் தப்பினார். அவர் பல்லாயிரம் மைல்கள் பாலைவனத்தில் பயணம்செய்து அரேபிய மொழியில் சுவிசேஷம் மற்றும் சங்கீதங்களை விநியோகித்தார். அதன்மூலம் நூற்றுக்கணக்கான ஆத்துமாக்களை சுவிசேஷத்தின் வெளிச்சத்திற்குள் கொண்டுவந்தார் ஆர்ச்சிபால்ட் ஃபோர்டர்.
🚸*பிரியமானவர்களே, நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்புகளுக்கு நீங்கள் மறுமொழி அளிக்கிறீர்களா?* 🚸
🛐 *"கர்த்தாவே, உம்மை வெறுப்போர் மத்தியில் சுவிசேஷத்தை எடுத்து செல்ல என்னை தைரியப்படுத்தும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
*******
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
❤️
3