
Daily One Missionary Biography
June 20, 2025 at 03:14 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚
✅ *ஜூன் 20* ✅ *தமிழ் Tamil* 👍
🛐 *அப்பொல்லோ Apollos* 🛐
மண்ணில்: 1ஆம் நூற்றாண்டு
விண்ணில்: 1ஆம் நூற்றாண்டு
ஊர்: அலெக்சாந்திரியா, எகிப்து
தரிசன பூமி : எபேசு மற்றும் கொரிந்து
அப்பொல்லோ என்பவர் அப்போஸ்தலர் பவுலின் உடன் ஊழியராய் இருந்து, எபேசுவிலும் கொரிந்துவிலுமுள்ள ஆதி சபைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுத்தார். யூதனாய் பிறந்த அவர், வேத வசனங்களை ஆழமாக புரிந்துகொண்டு, கர்த்தருடைய வார்த்தையை சொற்புலமையுடன் பிரசங்கித்தார். வேதாகமம் அவரை பற்றி இப்படியாக கூறுகிறது, "அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு; ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான்." (அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25) அவர் கி.பி. 54இல் எபேசு பட்டணத்திற்கு வந்து இயேசுவை குறித்த காரியங்களை பற்றி யூதர்களின் தேவாலயங்களில் தைரியமாய் பிரசங்கித்தார். எனினும், சத்தியத்தை அறிகிற அறிவு அவருக்குள் முழுமையாய் பூரணமடையவில்லை, ஏனென்றால் அவர் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மட்டும் அறிந்திருந்தார். ஆகையால் எபேசுவில் பவுல் அப்போஸ்தலரின் நண்பர்களான ஆக்கில்லா பிரிஸ்கில்லா என்பவர்கள், அப்பொல்லோவை அழைத்து வந்து, கர்த்தரின் வழியை இன்னும் துல்லியமாய் விளக்கி காட்டினர்.
இப்போது, நற்செய்தியை பூரணமாக புரிந்துகொண்ட அப்பொல்லோ, மிகுந்த ஆவிக்குரிய வைராக்கியத்துடன் பிரசங்கிக்கத் துவங்கினார். எபேசுவிலுள்ள சகோதரர்களால் ஊக்குவிக்கப்பட்டு, ஊழியத்திற்கென அகாயா நாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் தைரியமாக யூதர்களை எதிர்கொண்டு, இயேசுவின் தெய்வீகத்தன்மையை குறித்து பகிரங்க விவாதங்களை நடத்தினார். அப்பொல்லோ, வேத வாக்கியங்களை தெளிவாக விளக்கிகாட்டி, இயேசுவே நமக்கு வாக்களிக்கப்பட்ட மேசியா என்பதை அவர்களுக்குப் புரியவைத்தார். அகாயா நாட்டிலுள்ள விசுவாசிகளுக்கு அவர் பெரும் துணையாய் விளங்கினார்.
பின்பு, அப்பொல்லோ கொரிந்து பட்டணத்திற்கு புறப்பட்டு சென்று, அங்குள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் கடுமையாக உழைத்தார். அப்போஸ்தலர் பவுலினால் கிறிஸ்துவிற்குள் வழிநடத்தப்பட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில், அவர் மிக சிறந்த ஆவிக்குரிய வரங்களுடன் ஊழியம் செய்தார். பவுல் சுவிசேஷகராக சபைகளை நிறுவி விதைக்க, அப்பொல்லோ போதகராக பின்தொடர்ந்து சென்று, பவுல் விதைத்த விதைகளுக்கு நீர்பாய்ச்சினார். கொரிந்து பட்டணத்தில் அவர் செய்த ஊழியம், சுவிசேஷம் விதைக்கப்பட்ட பின், அம்மக்களை பின்தொடர்ந்து சென்று நீர்பாய்ச்சும் ஊழியத்தின் முக்கியத்துவத்தை எடுத்து காட்டுகிறது.
அப்போஸ்தலர் பவுல் அப்பொல்லோவை மதிப்பிற்குரிய சக ஊழியராகவும், நண்பராகவும் கருதினார். அப்பொல்லோ கொரிந்துவிலும் கிரேத்தாதீவிலும் செய்த ஊழியங்களை பவுல் ஊக்குவித்தார். அப்பொல்லோவின் பிற்காலத்தைப் பற்றி சரித்திரம் அதிகம் பேசவில்லையென்றாலும், அவர் அப்போஸ்தலர்களுக்கு ஊழியத்தில் உதவியாயிருந்து, சபை கட்டுவதிலும் உண்மையாயிருந்து, தேவனின் திராட்சைத் தோட்டத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனாய் உழைத்தார் என்று நாம் அறிவோம்.
🚸*பிரியமானவர்களே, நற்செய்தியை முழுமையாகக் கற்றுக்கொள்ள நீங்கள் வாஞ்சிக்கிறீர்களா?* 🚸
🛐 *"கர்த்தாவே, பின்தொடர்தல் ஊழியத்தை செய்யவும், உம்முடைய சபை கட்டப்படுவதில் பங்களிக்கவும் நீரே எனக்கு உதவிபுரியும். ஆமென்!"* 🛐
*******
*தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்!
*******
"தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி!
https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F
*******
🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏
*******
BenjaminForChrist @ +91 9842513842
*******
நன்றி: Dr. எப்சிபா செல்வம்
🙏
1