Daily One Missionary Biography
Daily One Missionary Biography
June 21, 2025 at 01:07 AM
📚 *தினம் ஒரு மிஷனெரி வரலாறு*📚 ✅ *ஜூன் 21* ✅ *தமிழ் Tamil* 👍 🛐 *க்லாட். லி. பிக்கென்ஸ் ஜுனியர் Claude L. Pickens Jr.* 🛐 மண்ணில்: 20-04-1900 விண்ணில்: 22-01-1985 ஊர்: அலெக்சாந்திரியா, வெர்ஜீனியா நாடு: அமெரிக்கா தரிசன பூமி : சீனா மற்றும் அரேபியா சிலருக்கு ஒரு இடத்தை குறித்த தரிசனம் இருக்கும்; வேறு சிலருக்கு குறிப்பிட்ட ஒரு கூட்ட மக்களை குறித்த பாரம் இருக்கும்; மற்றோருக்கு குறிப்பிட்ட ஒரு துறையில் சேவை செய்ய அழைப்பிருக்கும். அவர்கள் செல்லும் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் குறிக்கோள் ஒன்று தான், "சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்." என்பதே (மாற்கு 16:15) க்லாட் லியோன் பிக்கென்ஸ் ஜுனியர் (Claude Leon Pickens Jr.) என்பவர் இஸ்லாமியர்களை கிறிஸ்துவிற்குள் வழிநடத்த ஊழியம் செய்த மிஷனரிகளில் ஒருவர். தனது வாலிப வயதில் மிஷனரிகளுடன் ஏற்பட்ட சந்திப்புகளினால், ஊழிய வாஞ்சை அவர் உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. 1922ஆம் ஆண்டு "கிறிஸ்டின் கால்லிங் கான்ஃபெரென்ஸ்"-இல் (Christian Calling Conference – கிறிஸ்தவ அழைப்பு மாநாடு) சாமுவேல் ஸ்வீமர்-இன் (Samuel Zwemer) பிரசங்கத்தை கேட்டதும் முடிவாக, மிஷனரி பணிக்கென தன்னை அர்ப்பணித்தார். ஓர் ஆண்டிற்கு பின் பிக்கென்ஸ், ஸ்வீமரின் மகளாகிய நெல்லி எலிசபெத்-ஐ (Nellie Elizabeth) மணம் முடித்து, இருவருமாக சீனாவிற்கு "ஃபாரீன் அண்ட் டொமெஸ்டிக் மிஷனரி சொசைட்டி"-யின் (Foreign and Domestic Missionary Society-வெளிநாடு மற்றும் உள்நாட்டு மிஷனரி சங்கம்) மிஷனரிகளாக புறப்பட்டு சென்றனர். சீனாவில் நான்ஜிங் (Nanjing) என்ற ஊரில் உள்ளூர் மொழியை கற்றுக்கொள்ள சில காலம் தங்கியிருந்தார்கள். ஓர் உள்நாட்டு போரின் நிமித்தம், அத்தம்பதியர் அங்கிருந்து தப்பியோடி ஷாங்காய் (Shanghai) வந்தடைந்தனர். அங்கு பிக்கென்ஸ் "சொசைட்டி ஆஃப் ஃபிரண்ட்ஸ் ஆஃப் தி முஸ்லிம்ஸ் இன் சைனா"-வில் (Society of Friends of the Moslems in China [FOM] - சீன முஸ்லீம்களின் நண்பர்கள் சங்கம்) இணைந்து அதன் செயலாளராக பணிபுரிந்தார். மறுபுறம், செவிலியர் பயிற்சி பெற்ற நெல்லி, குழந்தைகளுக்கென மருத்துவசாலை ஒன்றை நடத்தி, தன் கணவருக்கு ஊழியத்தில் உதவி செய்து வந்தார். 1937ஆம் ஆண்டு வரை, பிக்கென்ஸ், யாங்ஸி (Yangtze) நதி ஆற்றங்கரையில் உள்ள நதி துறைமுகங்களில் ஊழியம் செய்து, செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் (St. Peter's Church - புனித பேதுரு தேவாலயம்) உதவி போதகராகவும் பணியாற்றிவந்தார். பிக்கென்ஸும் மற்ற சில ஊழியர்களும் வடமேற்கு சீனாவிலும், வடகிழக்கு திபெத்திலும், மங்கோலியாவின் உட்பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் பயணம் மேற்கொண்டு ஊழியம் செய்தனர். சீன-ஜப்பானிய போரின் போது, ஜம்போவாங்கா (Zamboanga) மற்றும் ஃபிலிப்பைன் தீவுகளிலுள்ள (Philippine Islands) இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்து, பின்பு 1939ஆம் ஆண்டு மத்திய சீனாவிற்கு திரும்பினர். இரண்டாம் உலக போரின் போது பிக்கென்ஸும் அவர் குடும்பமும் ஜப்பானியர்களால் கைதுசெய்யப்பட்டு 1941-1942 வரை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் விடுதலையான பின்பு, அமெரிக்காவிற்கு சென்று, நியூ யார்க்கில் உள்ள எஃப்.டி.எம்.எஸ்-இல் (FDMS) பணியாற்றினார். போர் ஓய்ந்தபின்பு, அவர் மறுபடியும் சீனாவிற்கு திரும்பி, 1950 வரை ஊழியம் செய்தார். பின்பு, பிக்கென்ஸ் அமெரிக்காவில் மாணவர் ஊழியத்தில் ஈடுபட்டார். அதற்கு பின்பு 1962ஆம் ஆண்டு, அரேபியாவிற்கு சென்று அராம்கோ நிறுவனத்தின் பணியாளர்கள் மத்தியில் சில ஆண்டுகள் ஊழியம் செய்தார். பிக்கென்ஸின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு மற்றும் சீனாவில் இஸ்லாம் தொடர்பான இலக்கியங்கள் கேம்பிரிட்ஜ்-இல் (Cambridge) உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) இன்றும் கூட பொக்கிஷவைப்பாக வைக்கப்பட்டுள்ளன. 🚸*பிரியமானவர்களே, வாழ்க்கையில் உங்கள் குறிக்கோள் தான் என்ன?* 🚸 🛐 *"கர்த்தாவே, எங்கெல்லாம் வாய்ப்புகள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அவைகளை உம் மகிமைக்கென பயன்படுத்த நீரே எனக்கு உதவி புரியும். ஆமென்!"* 🛐 ******* *தினம் ஒரு மிஷனெரி வரலாறு* உங்களுக்கு பிரயோஜனமாயிருந்தால், இதை மற்றவர்களுக்கும் பிரயோஜனமாய் அமையும்படி அவர்களுக்கும் அனுப்பி *கர்த்தரின் ஊழியம் செய்ய* அவர்களை உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறோம்! ******* "தினம் ஒரு மிஷனெரி வரலாறு" நீங்கள் தொடர்ந்து பெற கீழே காணும் வாட்ஸ்ஆப் லிங்கில் இணையுங்கள். நன்றி! https://whatsapp.com/channel/0029VaDwRrlGE56meEizCl3F ******* 🙏🙏 *கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!* 🙏🙏 ******* BenjaminForChrist @ +91 9842513842 ******* நன்றி: Dr. எப்சிபா செல்வம்

Comments