
ராம்கி
June 19, 2025 at 04:55 AM
இது சாமி போட்ட முடிச்சு..
அது தாண்டா மூணு முடிச்சு..
'மாமா உன் பொண்ணைக் குடு' என்று தெருவெங்கும் பாடல் ஒலித்த நேரத்தில் தமிழ் சமூகத்தின் பிற்போக்கான உறவுநிலை கூறுகள் என்றெல்லாம் நம்மவர்கள் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்கள். அதுதான் திராவிடர்களின் தனிக்குணம் (கவனிக்க, தமிழர் அல்ல!) என்று எல்லீஸ் வழியில் பயணித்து Dravidian Kinship எழுதியிருந்தார், தாமஸ் டிரவுட்மேன்.
வரலாற்று ஆய்வாளர் டிரவுட்மேனுக்கு தற்போது வயது 85. இந்திய யானைகள், அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், மெகஸ்தனிஸ் என்று உற்சாகமாக பேசுகிறார். திராவிடம், தென்னிந்திய மொழிக் குடும்பம் என்றெல்லாம் ஏகப்பட்ட ஆய்வுகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கும் மனிதருக்கு தன்னுடைய ஆரம்பகால ஆய்வுகளான அர்த்தசாஸ்திரம், அலெக்ஸாண்டர் படையெடுப்பு பற்றியெல்லாம் பேசியது உற்சாகத்திற்கு காரணமாக இருந்திருக்கும். நல்லதொரு தொடக்க உரை #thtindofest2025