
ராம்கி
115 subscribers
About ராம்கி
ஜெ. ராம்கி
Similar Channels
Swipe to see more
Posts

'முத்தைத்தரு பத்தித் திருநகை' ரேஞ்சில் திருப்புகழை படிக்காமல் நிறுத்தி நிதானமாக படித்தால் ஏதாவது விவகாரமாக கண்ணில் படும். 'சம பர மத சாதல சமயம் ஆறிரு தேவத' என்றால் சமண, பௌத்த மதங்களை ஒடுக்கி, ஆறு மதங்களுக்கும் தலைவனாக இருப்பவன் என்று அர்த்தம். எது எப்படியோ, முருகனுக்கு யார், எங்கே மாநாடு நடத்தினாலும் அங்கே ஹீரோ, அருணகிரிநாதர்தான் 😎

முந்தா நாள் ஜூனியர் ராமதாஸ் 'திமுக எதிர்ப்பு' என்றதும் நேற்று சீனியர் ராமதாஸ் 'திமுக ஆதரவு' பக்கம் சாய்ந்தார். இன்று ஜூனியர் 'பாஜக எதிர்ப்பு' என்றால், நாளை சீனியர்... ஏட்டிக்குப் போட்டி, வாட் எ பிட்டி!

https://youtube.com/playlist?list=PLUR9Ccz70m2ftMpwOhoIH1kNXtZCLQNPx&si=Wu0mKPI_6g7CgAo0

இது சாமி போட்ட முடிச்சு.. அது தாண்டா மூணு முடிச்சு.. 'மாமா உன் பொண்ணைக் குடு' என்று தெருவெங்கும் பாடல் ஒலித்த நேரத்தில் தமிழ் சமூகத்தின் பிற்போக்கான உறவுநிலை கூறுகள் என்றெல்லாம் நம்மவர்கள் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தார்கள். அதுதான் திராவிடர்களின் தனிக்குணம் (கவனிக்க, தமிழர் அல்ல!) என்று எல்லீஸ் வழியில் பயணித்து Dravidian Kinship எழுதியிருந்தார், தாமஸ் டிரவுட்மேன். வரலாற்று ஆய்வாளர் டிரவுட்மேனுக்கு தற்போது வயது 85. இந்திய யானைகள், அலெக்ஸாண்டர், சந்திரகுப்தர், மெகஸ்தனிஸ் என்று உற்சாகமாக பேசுகிறார். திராவிடம், தென்னிந்திய மொழிக் குடும்பம் என்றெல்லாம் ஏகப்பட்ட ஆய்வுகளையும் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கும் மனிதருக்கு தன்னுடைய ஆரம்பகால ஆய்வுகளான அர்த்தசாஸ்திரம், அலெக்ஸாண்டர் படையெடுப்பு பற்றியெல்லாம் பேசியது உற்சாகத்திற்கு காரணமாக இருந்திருக்கும். நல்லதொரு தொடக்க உரை #THTIndoFest2025

நல்ல அரசியல்வாதி சில நேரங்களில் புயலாகவும் சில நேரங்களில் தென்றலாகவும் இருக்க வேண்டும். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக்கொண்டு, எவ்வித சமரசத்திற்கும் தயாரில்லை என்றால் வெறும் கவன ஈர்ப்புக்காக அரசியலை பயன்படுத்திக் கொள்வதாக அர்த்தம். விஜய் & அண்ணாமலையிடம் உள்ள சிக்கல் இதுதான்

கோடம்பாக்கம், சேப்பாக்கம், கல்பாக்கத்தை எப்படி எழுதுவது என்று கடிக்கிறார், நண்பர். மழை பெய்தும் சென்னையில் சூடு குறையலை! ஏதோ ஒரு கவன ஈர்ப்பு + காசு பார்ப்பு ஆசாமி 'பாக்' என்பதை கடாசிவிட்டு, 'ஸ்ரீ' என்று எழுதியது வைரலாகிவிட்டது. 80களின் ஆனந்த விகடன், இதயம் பேசுகிறது ஜோக்ஸை ஆளாளுக்கு ஞாபகப்படுத்துகிறார்கள். சென்னை திரும்பியதும் டைம் லைனை எட்டிப்பார்த்தற்கு இப்படியொரு தண்டனையா?! 😤

ஜெரோம் பவுல் பேசுவதற்காக இந்தியாவிலிலிருந்து 250 பேர் காத்திருக்கிறார்கள். கரோலின் லீவிட் பேசினால் கூட 100 பேர் பார்க்கிறார்கள். ஆனால், டிரம்ப் பேசினால் 40 பேர் கூட எட்டிப்பார்ப்பதில்லை! #அவ்ளோதான்


ரஜினிக்கு மட்டுமல்ல கே.பிக்கும் most underrated படமென்றால் அது தப்பு தாளங்கள்! அதுதான் ரஜினி நடிப்பில் தனக்கு பிடித்தமானது என்று கமல்ஹாசன் சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார். சிம்புவையெல்லாம் பாராட்ட வேண்டிய நெருக்கடியான காலகட்டத்தில் தன்னுடைய நண்பரை பற்றியும் ஓரிரு வார்த்தை பேசிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்திருப்பாரோ? மன் கீ பாத்! 30 வருஷம் நெருக்கமான நட்போடு இருந்தாலும் சம்பிராதயத்திற்குக் கூட பாராட்டிவிடாதவர்களை பார்த்துள்ளேன். தினமும் தீரா குஷியோடு இணையத்தில் திட்டுபவர்கள் கூட யாரையாவது பாராட்டவேண்டும் என்றால் தயங்குவார்கள். சந்தேகமில்லை, தமிழுலகம் கமல்ஹாசன்களால் ஆனது!


பனையூர் பண்ணையார் அறிக்கை என்னும் பெயரில் எதையோ ஒன்றை எறிந்துவிட்டு ஓய்வெடுக்க போய்விட்டார். 24 மணி நேரமும் தூங்காமல் டூட்டி பார்க்கும் திமுக ஐடிவிங் ஆசாமிகளிடமிருந்து ஒரு சின்ன முனகல் கூட வரவில்லை. பிரகாஷ் ராஜ் கைவிடமாட்டார் என்று நம்புவோமாக! 😎