
Spark Media 💥
June 20, 2025 at 07:17 AM
🔴சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் மூன்று மடங்கு உயர்வு!
🔹இந்தியர்கள் ஸ்விட்சா்லாந்தில் உள்ள வங்கிகளில் வைத்துள்ள பணம் 2024ம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக அந்நாட்டுத் தேசிய வங்கி தெரிவித்துள்ளது
🔹அந்த வகையில், 2023ம் ஆண்டு சுவிஸ் வங்கிகளில் 1.04 பில்லியன் சுவிஸ் பிராங்க் இருந்த பணம், 2024ல் 3.54 பில்லியன் சுவிஸ் பிராங்காக அதிகரித்துள்ளது
🔹இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறத்தாழ 37,600 கோடியாகும்!
🔹தனிநபர் டெபாசிட்டை பொறுத்த வரை 11 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியர்களின் மொத்த வைப்பில் இது பத்தில் ஒரு பங்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.3,675 கோடியாகும்
🔹இதில், மற்ற வங்கிகளிலிருந்து ஸ்விட்சர்லாந்து வங்கிகளுக்கு மாற்றப்பட்ட இந்தியர்களின் பணம் சுமார் ரூ.32,000 கோடியாக உள்ளது. மொத்த பணத்தில் இதன் பங்கே அதிகமாக உள்ளது
🔹அதேபோல், அறக்கட்டளைகள் மூலம் ரூ.434 கோடியும், நிதி ஆவணங்கள் மூலம் ரூ.1,431 கோடியும் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் பணம் இருப்பு உள்ளது
🔹உலக அளவில் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் தரவரிசை பட்டியலில், கடந்த ஆண்டு 67வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 48வது இடத்தில் உள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளன
🔹Automatic exchange of information agreement-ன் படி 2019ம் ஆண்டு முதல் இத்தகைய விவரங்களை ஸ்விட்சர்லாந்து வழங்கி வருகிறது
🔹சுவிஸ் வங்கியில் வைத்துள்ள பணம் இந்தியர்களைப் பொறுத்த அளவில் கருப்புப் பணமாகக் கருதப்பட்டாலும், ஸ்விட்சர்லாந்தை பொறுத்த அளவில் சட்டப்படியான பணமாகவே கருதப்படுகிறது
😂
😮
2